Profit

வட்டி விகிதத்தை மாற்றாத ரிசர்வ் வங்கி - தொடர் வீழ்ச்சியில் ரூபாயின் மதிப்பு

எதிர்வரும் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி திறன் 7.4 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
வட்டி விகிதத்தை மாற்றாத ரிசர்வ் வங்கி - தொடர் வீழ்ச்சியில் ரூபாயின் மதிப்பு

உற்பத்தி திறன் 7.4 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது


ஆச்சர்யம் அளிக்கும் நடவடிக்கையை மத்திய ரிசர்வ் வங்கி இன்று மேற்கொண்டுள்ளது. அதனுடை ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் செய்யவில்லை. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதம் ஆகவும் உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.20-ஆக வீழ்சசியடைந்தது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து அறிய வேண்டிய தகவல்கள்

1. மார்ச் 2019 முடிவில் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி திறன் 7.4- ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
2. 6 பேர் கொண்ட குழுவில் 5 பேர் வட்டி விகிதத்தை மாற்றக் கூடாதென்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
3. முதன்முறையாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.20-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
4. 2019 மார்ச் மாதத்திற்குள் பண வீக்கம் 4.5- ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
5. முன்னதாக கடந்த ஜூன் மாதம் தனது வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top