This Article is From Aug 17, 2018

கேரள வெள்ளம்: ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை அடுத்து, தெற்கு ரயில்வே சில ரயில் சேவைகளை ரத்து செய்து அறிவித்துள்ளது

கேரள வெள்ளம்: ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை அடுத்து, தெற்கு ரயில்வே சில ரயில் சேவைகளை ரத்து செய்து அறிவித்துள்ளது. வெள்ளம் காரணமாகவும், மண் சரிவு காரணமாகவும், பல ரயில் தடங்கள் முடங்கியுள்ளன. ரயில் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், அதன் நிலையையும் குறித்து, ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு கருதி, சில ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. சில பகுதிகளில் ரயில் வேகம் 10 - 45 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 

 

ரத்து/ நேரம் மாற்றப்பட்ட ரயில் சேவைகளின் பட்டியல்:

  1. ரயில் எண் 56324 மங்களூரு - கோவை எக்ஸ்பிரஸ் ரயில், கோழிக்கோடு முதல் கோவை வரை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கான சேவை நிறுத்தப்பட்டுள்ளாது
  2. ஆகஸ்ட் 16-ம் தேதி கிளம்பிய எண் 18567 விசாகபட்டினம் - கொல்லம் ரயில், கோவையோடு நிறுத்தப்படுகிறது. இன்று கோவையில் இருந்து விசாகபட்டினத்துக்கு ரயில் 18568 கிளம்பும்.
  3. ஆகஸ்ட் 15-ம் தேதி கிளம்பிய சண்டிகர் - கோச்சுவேலி கேரல் சம்பர் க்ராந்தி ரயில், கோழிக்கோடு ரயில் நிலையத்தோடு சேவை நிறுத்தப்படுகிறது.
  4. கொல்லம் - விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (18568) இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
  5. 16528 கொல்லம் - எஸ்யந்த்பூர் ரயில் ஆகஸ்ட் 17-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
  6. 82631சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சுவிதா ரயில் சேவை ஆகஸ்ட் 17-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
  7. 0602 கொல்லம் - தாம்பரம் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 18-ம் தேதி ரத்தாகியுள்ளது.
  8. 12685 சென்னை சென்ட்ரல் - மங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் ஆகஸ்ட் 17-ம் தேதி ரத்து.
  9. 12601சென்னை சென்ட்ரல்- மங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் மெயில் ஆகஸ்ட் 17-ம் தேதி ரத்து.
  10. ஆகஸ்ட் 15-ம் தேதி கிளம்பிய 12660 ஷாலிமார் - நாகர்கோவில் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி மார்க்கத்தில் வழி மாற்றப்பட்டுள்ளது.

.