Profit

ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு தரப் பரிசோதனையில் தோல்வி

ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் 5 அன்று செய்யப்பட்ட ஆய்வில் ஜான்சன்&ஜான்சன் பேபி ஷாம்பு “தீங்கு விளைவிக்கும் பொருட்களால்” ஆனது என்றும் தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு தரப் பரிசோதனையில் தோல்வி

ராஜஸ்தானில் மேற்கொண்ட ஆய்வில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு தரப் பரிசோதனையில் தோல்வியை அடைந்தூள்ளது.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. ராஜஸ்தான் மாநில பரிசோதனையில் இந்த உண்மை வெளிப்பட்டது
  2. பேபி ஷாம்புவில் ஃபார்மால்டிஹைட் உள்ளது.
  3. ஃபார்மால்டிஹைட் புற்றுநோயை உருவாக்கக் கூடியது

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான ஷாம்பு ராஜஸ்தான் நடத்திய தர பரிசோதனையில் தோல்வியடைந்தன. மாநில மருந்துகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஆய்வு முடிவுகள் அமெரிக்க மருந்து தயாரிப்பாளரின் ஜான்சன்& ஜான்சனை பேபி ஆயிலை நிராகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆஸ் பெஸ்டாஸ் கலந்துள்ளதாக தெரிவித்தது.

பிப்ரவரியின் பிற்பகுதியில் ஜே&ஜே  பேபி பவுடரில் ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்று உறுதி செய்த பின் உற்பத்தியை மீண்டும் தொடங்கியது. ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் 5 அன்று செய்யப்பட்ட ஆய்வில் ஜான்சன்&ஜான்சன் பேபி ஷாம்பு “தீங்கு விளைவிக்கும் பொருட்களால்” ஆனது என்றும் தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், விவரங்கள் வெளியாகவில்லை. அரசு வெளியிட்ட அறிக்கையில் 2021 காலாவதியாகும் பேபி ஷாம்பு மாதிரிகளை எடுத்து ஆய்வில் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.  

மாநில மருந்துகள் கண்காணிப்புக் குழுவிலிருந்து பெறப்பட்ட முடிவுகள், மாதிரிகளில் ஃபார்மால்டிஹைட் உள்ளதாக கண்டுபிடித்துள்ளது. ஃபார்மால்டிஹைட் என்பது  கட்டிட பொருட்கள் தயாரிக்க பயன்படக்கூடியது. புற்றுநோயை உருவாக்கக் கூடியதாகும். புற்றுநோயை உருவாக்கூடியது. 

இது குறித்து ஜான்சன் & ஜான்சன் செய்தித் தொடர்பாளர் பேசிய போது, “எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடைக்கால முடிவுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பாக உள்ளன என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்தார். அரசாங்கத்தில் ஆய்வு முடிவுகள் இடைக்காலத்திற்கானவை. ஆய்வுகள் அறியப்படாத மற்றும் குறிப்பிடப்படாத வகையில் உள்ளது. எங்கள் தயாரிப்பில் ஃபார்மாடிஹைட்டினை சேர்க்க மாட்டோம் என்று இந்திய அரசிற்கு உத்தரவாதம் கொடுத்துள்ளோம். மேலும் காலப்போக்கில் எங்கள் பொருள் ஃபார்மாடிஹைட்டி மூலக்கூறினை வெளியிடாது என்றும் உறுதியளித்துள்ளதாக செய்தி தொடர்பாளர்  ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

ஆய்வறிக்கையை வெளியிட்ட ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் உடனடியாக கருத்தினை தெரிவிக்கவில்லை.

டிசம்பர் மாதம் ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் குறித்த விசாரணையை மத்திய ரெகுலேட்டர் ஆய்வு நடத்தி அதில் கேன்சரை உருவாக்கும் பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜே & ஜே நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையை ஒரு தலைபட்சமானது தவறானது என்று கூறியுள்ளது. இந்தியாவில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஜான்சன் & ஜான்சன் பொருட்கள் முன்னணியில் இருந்து வருகிறது என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனம் யூரோமானிட்டர் தெரிவித்துள்ளது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top