
Jio GigaFiber Plan: ஜியோ ஃபைபர் திட்டங்களின் விலை ரூ 700 முதல் ரூ. 10,000 வரை உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வதுஆண்டு பொதுக்கூட்டத்தில் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள் முதல் டிஜிட்டல் செட்- டாப் பாக்ஸ் வரை அதன் ஜியோ ஃபைபர் திட்டத்தின் கீழ் பல திட்டங்களை அறிவித்தார்ர். ஜியோ ஃபைபர் திட்டம் செப்டம்பர் 5 முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.
ஜியோ ஃபைபர் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை:
ஜியோ ஃபைபர் திட்டங்களில் வருடாந்திர திட்டங்களை தேர்வு செய்யும் ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு ஹெச்.டி அல்லது 4கே செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஈ.டி தொலைக்காட்சியுடன் இணைந்தால் ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ -செட்-டாப் பாக்ஸின் அனுபவம் முற்றிலும் புதுமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனையே ஜியோ-பார்ரெவர் திட்டங்கள் என்று அழைக்கிறோம். ஜியோ ஃபைபரின் வரவேற்பு திட்டங்களை பயன்படுத்தி 4கே எல்.இ.டி தொலைக்காட்சி மற்றும் 4 கே செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசம் என்று கூறியுள்ளார். ஜியோ ஃபைபர் திட்டத்தை அனைவரும் பயன்படுத்த அழைப்பதாக அம்பானி தெரிவித்தார்.
ஜியோ ஃபைபர் திட்டங்களின் விலை ரூ 700 முதல் ரூ. 10,000 வரை உள்ளது.
பீரிமியம் ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான அதே நாளில் தங்களின் வீடுகளில் அதை பார்க்க முடியும். இதை ஜியோ முதல் நாள் முதல் காட்சி என்று அழைக்கிறோம். ஜியோ ஃபைபர் மூலமாக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான சர்வதேச அழைப்புகள் ரூ. 500 செலுத்தி பேச முடியும்.