
ஜியோ அறிவிப்பின் படி, இந்த திட்டங்களில் ஜி.எஸ்.டி வரி சேர்க்கப்படவில்லை
தொழிலதிபர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீ ஆப்டிகல் ஃபைபர் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவையை தொடங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் பிராட்பேண்ட் சேவை ரூ. 699 முதல் தொடங்கி ரூ. 8,499 வரையிலான விலைகளில் கிடைக்கிறது. செப்டபர் 5 -ம்தேதி ஜியோ ஃபைபரை வணிக ரீதியாக அறிமுகப்படுத்தியது. இணைய வேகத்தை 100 எம்.பி.பி.எஸ் -1 ஜி.பி.பி.எஸ் என்ற அடிப்படையில் வழங்குகிறது. ஆறு ஜியோ ஃபைபர் திட்டங்கள் - வெண்கலம், வெள்ளி, தங்கம், வைரம், டைட்டானியம் மற்றும் பிளாட்டினம் என பெயரிடப்பட்டுள்ளன.
ஜியோ ஃபைபர் திட்டங்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் மாதாந்திர கட்டணங்களின் ஒப்பீட்டினை இங்கு காணலாம்:
ஜியோஃபைபர் மாத சந்தா விலை
“வெண்கலம்” ஜியோ ஃபைபர் திட்டம் ரூ. 699,
“வெள்ளி” ஜியோ ஃபைபர் திட்டம் ரூ. 849,
“தங்கம்” ஜியோ ஃபைபர் திட்டம் ரூ. 1,299
“வைரம்” ஜியோ ஃபைபர் திட்டம் ரூ. 2,499
“பிளாட்டினம்” ஜியோ ஃபைபர் திட்டம் ரூ. 3,999
மிகவும் விலை உயர்ந்த “டைட்டானியம்” ஜியோ ஃபைபர் திட்டம் ரூ. 8,499
JioFiber plan | Monthly tariff | Internet speed | Total amount of data at high speed |
---|---|---|---|
JioFiber Bronze | Rs 699 | 100 Mbps | 150 GB (100 GB + 50 GB extra) |
JioFiber Silver | Rs 849 | 100 Mbps | 400 GB (200 GB + 200 GB extra) |
JioFiber Gold | Rs 1,299 | 250 Mbps | 750 GB (500 GB + 250 GB extra) |
JioFiber Diamond | Rs 2,499 | 500 Mbps | 1500 GB (1,250 GB + 250 GB extra) |
JioFiber Platinum | Rs 3,999 | 1 Gbps | 2500 GB |
JioFiber Titanium | Rs 8,499 | 1 Gbps | 5000 GB |
(Source: Reliance Jio) |
இந்த திட்டங்கள் அனைத்து பொருளாதார தரப்பு மக்களும் அணுகக்கூடியதாக இருக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
ஜியோ அறிவிப்பின் படி, இந்த திட்டங்களில் ஜி.எஸ்.டி வரி சேர்க்கப்படவில்லை. ஆறு திட்டங்களில் சந்தாதாரர்கள் 30 நாளில் குறிப்பிட்ட அளவு டேட்டாவை அதிக வேகத்தில் பெறுவார்கள் அதன் பின் இணைய வேகம் 1 எம்.பி.பி.பிஸ் ஆக குறைக்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.