Profit

ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சலுகைகள்

உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் வாராந்திரம் 65 புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சலுகைகள்

விமானத்தில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை  அதிகரிப்பதற்காக விமான சேவை நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை கொடுத்து தங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகின்றன.

 கடந்த சில மாதங்களாக உள்நாட்டு விமான சேவையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் வலுவான வளர்ச்சியை பெற போட்டி போட்டு சலுகைகளை வழங்கி வருகிறது. இண்டிகோ நிறுவனம் விஜயவாடாவிலிருந்து முதல் சர்வதேச விமானத்தை அறிமுகப்படுத்தியது. கோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைனும் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஜெட்ஏர்வேஸ்

உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் வாராந்திரம் 65 புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புனேயிலிருந்து நேரடியாக சிங்கப்பூர்க்கு, சிங்கப்பூரிலிருந்து டெல்லிக்கும் மும்பைக்கும் நேரடி விமான சேவைகளை அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் போக்குவரத்தை டெல்லியிலிருந்து பாங்காக்கிற்கும் டெல்லியிலிருந்து காத்மாண்டிற்கு இணைத்தது.

ஜெட் ஏர்வேஸில் சிறப்பு சலுகையாக 30சதவீதம் டிஸ்கவுண்டை அறிவித்துள்ளது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாடு மற்றும் சர்வதேச விமான பயணத்திற்கு மட்டுமே இது பொருந்தும்.

இண்டிகோ

விஜயவாடாவில் இருந்து ஆந்திர மாநில அரசுடன் இணைந்து சர்வதேச விமான சேவையை அறிமுகப்படுத்தியது. விஜயவாடாலிருந்து  சிங்கப்பூர்க்கு இடையேயான போக்குவரத்தை அதிகரித்துள்ளது, போபாலிருந்து ஹைதராபாத் மற்றும் ஜபல்பூர்லிருந்து ஹைதராபாத் வரை விமான போக்குவரத்தை கொண்டு வர முடிவெடுத்துள்ளது. 

ஸ்பைஸ்ஜெட் 

ஜனவரி 1 முதல்  கொல்கத்தா, புனே மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களை இணைக்கக் கூடியவகையில் ஹைதராபாத்திலிருந்து விமான சேவையை அறிவித்துள்ளது. பெங்களூரிலிருந்து கொச்சி, போர்ட் பிளேர், பாக்தோரா, மேற்கு வங்கம் வரையான சீசனல் முறையில் விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹைதாரபாத்திலிருந்து கொல்கத்தா ரூட்டிற்கு 2,699 ஆகவும் கொல்கத்தாவிலிருந்து  ஹைதராபாத் வரை பயணிக்க ரூ3.199 ஆகவும் நிர்ணயித்துள்ளது. ஹைதாரபாதிலிருந்து புனே வரை பயணக்கட்டணம் ரூ. 2,209 முதல் 2,429 வரையாக இருக்கும் . 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top