This Article is From Dec 29, 2018

அதிரடி தள்ளுபடி விலையில் விமான பயணச்சீட்டுகள்: தகவல்கள் உள்ளே

விமான நிறுவனங்கள் சார்பில் தள்ளுபடி விலையில் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடி தள்ளுபடி விலையில் விமான பயணச்சீட்டுகள்:  தகவல்கள் உள்ளே

ஜெட் ஏர்வேஸ் சார்பில் உள்நாட்டு விமானங்களுக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி அளித்துள்ளது.

விமான நிறுவனங்கள் சார்பில் தள்ளுபடி விலையில் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அது குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்:

ஜெட் ஏர்வேஸ் சார்பில் உள்நாட்டு விமானங்களுக்கு 30 சதவிகிதம் தள்ளுபடி அளித்துள்ளது. இந்த விலை தள்ளுபடி வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 7 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே பொருந்தும்.

கோஏர் சார்பாக உள்நாட்டு விமான பயணச்சீட்டுகள் ரூபாய் 1,399 முதல் விற்கப்படுகின்றன. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அயல்நாட்டு விமான வழிதடங்களில் பயணிக்கும் விமானங்களுக்கு ரூபாய் 13,899 ரூபாய்லிருந்து பயணச்சீட்டுகள் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் தள்ளுபடி விலையில் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்னறால் டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் பயணச்சீட்டுகளை மூன் பதிவு செய்ய வேண்டும்.

இந்த திடீர் விலை தள்ளுபடி நாட்டின் விமான சேவை வழங்கும் நிறுவனங்களிடையே நிலவும் போட்டியை சமாளிக்கவே அறிவிக்கப்பட்டது. மேலும் விமான போக்குவரத்தை மக்கள் இன்னும் விரும்புவதற்கான முயற்சியாக இது அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.

ஏர்ஏசிய நிறுவனம் சார்பில் மும்பை முதல் பெங்களூரு வரை தினமும் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் முதல் விமான பயணச்சீட்டின் விலையை சுமார் 1,599 ஆக குறைத்துள்ளது. இந்த தள்ளுபடி விலைகள் ஜனவரி 15, 2019, முதல் இயக்கப்படும் விமானங்களுக்கு தரப்படும் என அந்நிறுவனம் அறிவத்துள்ளது. மேலும் அந்த தள்ளுபடி விலை பயணச்சீட்டுகளை ஜனவரி 6 ஆம் தேதிக்கு முன் பெறுவது அவசியமாகும்.

ஏர் இந்தியாவை பொறுத்தவரை பெங்களூரூ - அகமதாபாத், டெல்லி - கோயம்பத்தூர் மற்றும் டெல்லி - கோவா இடையே செல்லும் வழித்தடங்களுக்கு 1000 ரூபாய் முதல் பயணச்சீட்டின் விலை இருக்கும் என அறிவித்துள்ளது.