Profit

ஜெட் ஏர்வேஸ் துணை சிஇஓ அமித் அகர்வால் திடீர் ராஜினாமா!

கடந்த 2015ல் ஜெட் ஏர்வேஸின் தலைமை நிதி அதிகாரியாக அகர்வால் பணியில் சேர்ந்தார். இதுவரை அவருக்கு மாற்று அதிகாரி குறித்த தகவலை அந்த நிறுவனம் தெரிவிக்கவில்லை.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜெட் ஏர்வேஸ் துணை சிஇஓ அமித் அகர்வால் திடீர் ராஜினாமா!

Jet Airways: அமித் அகர்வாலுக்கு மாற்று குறித்து ஜெட் ஏர்வேஸ் அறிவிக்கவில்லை.


ஜெட் ஏர்வேஸின் துணை தலைமை நிர்வாக அதிகாரியும், தலைமை நிதி அதிகாரியாகவும் இருந்து வந்த அமித் அகர்வால் ராஜினாமா செய்துவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி தனது சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு என பல காரணிகள் ஜெட் ஏர்வேஸ்-சின் சரிவுக்குக் காரணமாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் கடன் சுமையால் கடந்த சில வாரங்களில் மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

அகர்வாலுக்கு மாற்று குறித்து ஜெட் ஏர்வேஸ் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2015ல் ஜெட் ஏர்வேஸின் தலைமை நிதி அதிகாரியாக அகர்வால் பணியில் சேர்ந்தார்.

சரிவடைந்துள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் அளிப்பவர்கள் அந்நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றி வருகின்றனர். தற்போது, அவர்கள் வழங்கிய கடன்களை மீட்க அந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட்ஸ், (எஸ்பிஐயின் ஒரு அங்கமாகும்) ஜெட் ஏர்வேஸை ஏலத்தில் எடுக்க எடிஹாட் ஏர்வேஸ் மற்றும் 3 நிறுவனங்கள் ஏலத்தில் பெற முயற்சி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குகளை பெறுவதற்கு தங்கள் கோரிக்கைகளை சமர்பிக்க வெள்ளியன்றே கடைசி நாளாகும்.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top