Profit

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்

ஸ்பைஸ் ஜெட் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட விமானிகள், 200க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்

உள்நாட்டு போக்குவரத்தில் 24 புதிய விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்ட நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானிகள் மற்றும் கேபினட் குழு, தொழில்நுட்ப மற்றும் விமான நிலைய ஊழியர்களை பணிக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. 

ஸ்பைஸ் ஜெட் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட விமானிகள், 200க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. 

ஸ்பைஸ் ஜெட் தொடர்ந்து தனது நிறுவனத்தை விரிவாக்கி வருகிறது. உள்நாட்டு போக்குவரத்தில் 24 புதிய விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  “இந்திய பயணிகளுக்கு சேவை செய்ய அனைத்து வித முயற்சிகளையும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் எடுத்து வருகிறது. குறிப்பாக சீசன் நேரத்தில் ஏற்படும் பயண நெருக்கடிகளைத் தவிர்க்க ஸ்பைஸ் ஜெட் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பில் இருந்து அவசர கால நிதி பெறத் தவறியதால் கடனாளியான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 1.2 பில்லியன் டாலர் கடன் உள்ளது. ஊழியர்களுக்கும் முறையான சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த ஊழியர்கள் சம்பளம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பல ஊழியர்கள் ராய்ட்டர்ஸ்க்கு கொடுத்த பேட்டியில் 2 முதல் 4 மாதம் வரை சம்பளம் கொடுக்க வில்லை என்று தெரிவித்துள்ளனர். வீட்டுக்கடன்கள், பள்ளி மற்றும் கல்வி கட்டணம் கொடுக்க முடியாமல் ஊழியர்கள் தவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

(With agency inputs)



Election Results for Lok Sabha Election 2019 will be out on May 23. Get the latest election news and live updates on ndtv.com/elections. Catch all the action on NDTV Live. Like us on Facebook or follow us on Twitter and Instagram for news updates from each of the 543 parliamentary seats for the election 2019

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top