ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன இயக்குனர் குழுவிலிருந்து நரேஷ் கோயல் விலகல்!!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர்.

நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸின் சேர்மனாவும் நீடிக்க மாட்டார் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • Naresh Goyal ceases to be chairman, says Jet Airways
  • Airline announces induction of two nominee directors of lenders
  • Jet Airways constitutes committee to monitor daily operations, cash flow

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜினமா செய்துள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இருவரும் பதவி விலக வேண்டும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் வலியுறுத்தி வந்தன. நெருக்கடிகள் அதிகரித்த நிலையில் இருவரின் பதவி விலகல் நடந்திருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் கடந்த ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடியது. 

ஜெட் ஏர்வேஸில் மொத்தம் 119 விமானங்கள் உள்ளன. இவற்றில் 54 விமானங்கள் கடன் தவணை கட்ட முடியாமல் உள்ளது. பராமரிப்பின்மை காரணமாக 24 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளது. சுருக்கமாக கூறினால் நாட்டின் மிகப்பெரும் தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் மூன்றில் 2 பங்கு விமானங்களை பல்வேறு காரணங்களால் இயக்க முடியாத நிலையில் உள்ளது. 

விமான சேவையை நாட்டில் ஒழுங்குபடுத்தி வரும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் கடந்த வாரம் வெளியிட்ட தகவலில் மொத்தம் 41 விமானங்கள் மட்டுமே ஜெட் ஏர்வேஸில் இயங்கும் நிலையில் இருப்பதாக கூறியுள்ளது.