This Article is From Jul 13, 2018

அயோத்தியாவில் தொடங்கி கொழும்பு வரை, ஶ்ரீ ராமாயணம் சுற்றுலா ரயில்

ஸ்ரீ ராமாயணம் எக்ஸ்பிரஸ் என்ற சுற்றுலா ரயிலை இந்திய ரயில்வே அயோத்தியாவில் இருந்து தொடங்கி இலங்கை கொழும்புவில் முடிவடைகிறது

அயோத்தியாவில் தொடங்கி கொழும்பு வரை, ஶ்ரீ ராமாயணம் சுற்றுலா ரயில்

ஸ்ரீ ராமாயணம் எக்ஸ்பிரஸ் என்ற சிறப்பு சுற்றுலா ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு சுற்றுலா திட்டம் அயோத்தியாவில் இருந்து தொடங்கி இலங்கை கொழும்புவில் முடிவடைகிறது என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வேயின் இந்த புதிய சுற்றுலா ரயில் சேவை நவம்பர் 14-ஆம் தேதி தொடங்கி 16 நாட்களாக நீடிக்கும். ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இயக்கப்படும் இந்த சிறப்பு சுற்றுலா ரயில் டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் தொடங்கியது. முழு சுற்றுலா பயணத்திற்கான ரயில் கட்டணம்15,120 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமாயணம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண தகவல்கள்

  1. ஐஆர்சிடிசி சிறப்பு சுற்றுலாவானது, ராமர் மற்றும் ராமாயணத்துடன் தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் செல்கிறது. இலங்கையில் ராமாயணம் தொடர்பான இடங்களுக்கும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  2. இந்த ரயில் சேவை டெல்லியில் உள்ள சப்தார்ஜங் என்ற ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி முதலில் அயோத்தியா சென்றடையும்.

  3. இந்த ரயில் நந்திகிராம், சீதா மார்ஹி, ஜானக்பூர், வாரணாசி, பிரயோக், ஷிரிங்கபூர், சித்ராகூட், ஹம்பி, நாசிக் மற்றும் ராமேஸ்வரம் மார்க்கத்தில் நின்று செல்லும்.

  4. இலங்கைக்கு செல்ல கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். இலங்கையில் 5 இரவுகள்/ 6 பகல்களுக்கு 36,970 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக ரயில்வே கூறியுள்ளது. மேலும், கொழும்புவுக்கான விமான் டிக்கெட்டையும் பயணிகளே புக் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  5. பயணிகள் சென்னையிலிருந்து கொழும்புவிற்கு விமானம் மூலம் செல்ல பதிவு செய்து கொள்ளலாம்.

  6. இந்த ரயில் 800 படுக்கைகள் கொண்டது.

  7. இந்த ரயிலில், பயண வகுப்பு பிரிவுகள் கிடையாது.

  8. பயணக் கட்டணம், தங்குமிடம் உணவு ஆகியவற்றை உள்ளடக்கியதே இந்த 15,120 கட்டணம் என்று கோயல் தெரிவித்துள்ளார்.

  9. இந்த சுற்றுலாவின் போது சுற்றுலா நிர்வாகி பயணிகளுடன் இருப்பார். என்றும் கோயல் ட்டுவீட் செய்துள்ளார்.

.