This Article is From Dec 10, 2018

ரயில் சீட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி.. 10 முக்கிய தகவல்கள்!

பயண தினத்திற்க்கு சுமார் 120 தினங்களுக்கு முன்ரே முன்பதிவை நம்மால் செய்ய முடியும்

ரயில் சீட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி.. 10 முக்கிய தகவல்கள்!

Reservation fee is also levied on RAC and waitlisted tickets, said Indian Railways.

ரயில் பயண சீட்டுக்களை பெற ரயில்வே முன்பதிவு செய்யும் இடத்திலோ, அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா ஏஜென்சியிடமோ அல்லது நேரடியாக ஐ.ஆர்.சி.டி.சி செயலியிலோ முன்பதிவு செய்யலாம்.
பயண தினத்திற்க்கு சுமார் 120 தினங்களுக்கு முன்ரே முன்பதிவை நம்மால் செய்ய முடியும். பயணத்தின் முன்பதிவு கட்டணங்கள் வகுப்புகளுக்கு தகுந்தவாறு மாற்றப்படும்.

ரியல் முன்பதிவின் 10 முக்கிய தகவல்கள்:

1.முன்பதிவு கட்டணம், விரைவுரயில் கட்டணம், உணவு கட்டணம், ஜி.எஸ்.டி. போன்ற இதர கட்டணங்கள், ரயில் பயணசீட்டுகளின் அடிப்படைக் கட்டணத்துடன் சேர்க்கப்படுபவை.

2.காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆர்.ஏ.சி பட்டியல்களில் இருப்போருக்கும் முன்பதிவு கட்டணம் பொருந்தும்.

3.பயணம் தொடங்கும் நகரம் முதல் இறுதிவரை விலைப்பட்டியல் இருக்கும். ஷதாப்தி, ஜன் ஷதாப்தி, ராஜ்தானி மற்றும் டுரோன்டோ போன்ற ரயில்களுக்கு ஸோனல் ரயில்வே நிர்வாகம் பொறுப்பளிக்கும்.

4. பயணதூரம் ஓரே அளவாக இருந்தால் அதில் குறிப்பிடுள்ள அளவு கட்டணத்தில் வரும்.5. சேவை கட்டணமாக ரூபாய் 20 ( இரண்டாம் மற்றும் படுக்கைகள் இருக்கும் வகுப்புக்கும்) ரூபாய் 40 மற்ற குளிர்சாதன வகுப்புக்களுக்கும் வசூலிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரியுடன் இந்த சேவை கட்டணத்தில் 6 நபர்கள் வரை பயணிக்க முடியும்.

ClassReservation FeeSupplementary charges for Superfast trains
AC IstRs. 60Rs 75
AC 2 TierRs. 50Rs 45
Ist (Mail/Express)Rs. 50Rs 45
Ist (Ordinary)Rs. 50----
AC - 3 TierRs. 40Rs 45
AC Chair CarRs. 40Rs 45
Sleeper (Mail/Express)Rs. 20Rs 30
Second Sitting (Mail/Express)Rs. 15Rs 15
Sleeper (Ordinary)Rs. 20----
Second Sitting (Ordinary)Rs 15----

6. 5 வயதிற்க்கு உட்பட்ட குழந்தைள் கட்டணமில்லாமல் ரயிலில் பயணிக்க முடியும். ஐந்து வயதிற்கும் மேல் உள்ள குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூலிக்கப்படும்.

7. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்காண உணவிற்கு ராஜ்தானி மற்றும் ஷதாப்தி விரைவு ரயில்களில் கட்டணம் வசூலிப்பதில்லை

8.படுக்கை வரிப்புகள் எல்லா ரயில்களில் (காரிப் ராத் ரயிலை தவிர) உள்ள குளிர்சாதன பெட்டிகளிளும் கூடுதல் கட்டணம் இல்லாமல் இருக்கும்.

9.காரிப் ராத் விரைவு ரயில் மற்றும் மிக்ஸ்டு டுரோண்டோ ரயில்களில் கட்டணத்தின் பெயரில் படுக்கை விரிப்புக்கள் கொடுக்கப்படும்.

10.காலாண்டு சீசன் டிக்கெட்டுகள் 2.7சதவீத மதிப்புதான் மாதம் தோறும் வாங்கும் சீசன் டிக்கெட்டின் மதிப்பாக இருக்கும்.

 

.