This Article is From Jul 07, 2018

தட்கல், பிரீமியம் தட்கல் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்

தட்கல் டிக்கெட் விலை, இரண்டாம் வகுப்பு பயண டிக்கெட் விலையில், 10% அதிகமாக இருக்கும்

தட்கல், பிரீமியம் தட்கல் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்

அவசர கால ரயில் பயணங்களுக்கு உதவ தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் கோட்டாக்களை வழங்குகிறது ஐ.ஆர்.சி.டி.சி. இந்த இரண்டு கோட்டா டிக்கெட்களுக்கும் ஒரே வித்தியாசம் மட்டுமே உள்ளது. விலை மட்டுமே அந்த வித்தியாசம். தட்கல் டிக்கெட் விலை, இரண்டாம் வகுப்பு பயண டிக்கெட் விலையில், 10% அதிகமாக இருக்கும். மற்ற வகுப்புகளுக்கு இது 30% ஆக இருக்கும். பிரீமியம் தட்கலுக்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை. விலை மாறிக் கொண்டே இருக்கும்.

தட்கல் vs பிரீமியம் தட்கல் தெரிந்து கொள்ள வேண்டியவை

1. பிரீமியம் தட்கல் டிக்கெட் விலையானது, புக்கிங் எண்ணிக்கையையும், குறைந்து வரும் சீட் எண்ணிக்கையையும் பொருத்து மாறுபடும். எளிதாக சொல்லப்போனால், சீட்டுக்கான தேவை அதிகரிக்க, விலையும் அதிகரிக்கும். சில நேரங்களில் மிக அதிகமாக கூடா இருக்கலாம்.

2. தட்கல், பிரீமியம் தட்கல் இரண்டுமே பயண தேதித்துக்கு ஒரு நாள் முன் பதிவு செய்ய வேண்டும். ஏ.சி வகுப்பில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல்புக்கிங் தொடங்கும்.

3. ஆர்.ஏ.சி அல்லது வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்களை தட்கலில் பதிவு செய்யலாம். ஆனால் பிரீமியம் தட்கலில் பதிவு செய்ய முடியாது.

4. ஏஜென்ட்கள் மூலம் பிரீமியம் தட்கல் புக் செய்ய முடியாது. ஆனால் ஐ.ஆர்.சி.டி.சியின் வெப் சர்வீஸ் ஏஜென்ட்கள் மட்டும், ஒரு நாளுக்கு, ஒரு ரயிலில், ஒரே ஒரு பிரீமியம் டிக்கெட்டை பதிவு செய்ய முடியும்.

5. ஆன்லைனில் தட்கல் டிக்கெட் பதிவு செய்ய பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அனைத்தும், பிரீமியம் தட்கலுக்கும் பொருந்தும் என்கிறது ஐ.ஆர்.சி.டி.சி.

.