This Article is From Jan 25, 2019

இந்த 5 சூழலில்தான் தக்கல் டிக்கெட்டிற்கான பணம் திரும்பக் கிடைக்கும்

காலை 10 மணிக்கு ஏசி வகுப்பிற்கான தக்கல் முன்பதிவு தொடங்கும். காலை 11 மணிக்கு ஏசி அல்லாத வகுப்பிற்கான முன்பதிவு தொடங்கும். 

இந்த 5 சூழலில்தான் தக்கல் டிக்கெட்டிற்கான பணம் திரும்பக் கிடைக்கும்

தக்கல் டிக்கெட் புக் செய்யும் போது கன்ஃபார்ம் டிக்கெட் கிடைத்து அதைக் கேன்சல் செய்தால் எந்த வகையிலும் பணம் திருப்பித் தரமாட்டாது.

இந்திய ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக ரயில் பயணத்திற்கான டிக்கெட்டை பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலமாக புக் செய்யப்படும் தக்கல் டிக்கெட் புக் செய்யும் போது கன்ஃபார்ம் டிக்கெட் கிடைத்து அதைக் கேன்சல் செய்தால் எந்த வகையிலும் பணம் திருப்பித் தரமாட்டாது. சில சூழல்களில் மட்டுமே தக்கல் டிக்கெட்டின் பணம் திருப்பியளிக்கப்படும். தக்கல் டிக்கெட் என்பது பயண நாளுக்கு ஒரு நாள் முன்பு மட்டும்தான் பதிவு செய்ய முடியும்.  காலை 10 மணிக்கு ஏசி வகுப்பிற்கான தக்கல் முன்பதிவு தொடங்கும். காலை 11 மணிக்கு ஏசி அல்லாத வகுப்பிற்கான முன்பதிவு தொடங்கும். 

பின்வரும் சூழல்களில் மட்டுமே தக்கல் டிக்கெட்டிற்கு பணம் திருப்பியளிக்கப்படும்.

1.ரயில் புறப்படும் இடத்திலிருந்தோ அல்லது ரயில் சென்று சேரும் இடத்திற்கோ 3 மணிநேரத்திற்கு மேல் தாமதமானால் பணம் திருப்பியளிக்கப்படும். 

2.ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக இருந்து, அதில் பயணிக்க பயணி தயாராக இல்லையென்றால் டிக்கெட்டிற்கான முழுப்பணமும் திருப்பி அளிக்கப்படும்.

3. ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் போது அதில் பயணியின் ஏறும் இடமும், இறங்கும் இடமும் இல்லையென்றால் முழுப்பணம் திருப்பியளிக்கப்படும்.

4. தட்கலுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த இணைப்பு பெட்டியில், பயணி முன்பதிவு செய்த வகுப்பில் பயணிக்கு அதே வகுப்பில் ஒதுக்கப்படவில்லையென்றால் பணம் திருப்பியளிக்கப்படும்.

5.பயணி லோயர் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்து ஆனால், பயணி லோயர்  வகுப்பில் பயணம் செய்ய விரும்பவில்லையென்றால் முன்பதிவு செய்ததை விட குறைவான அளவில் கட்டணத்தை திரும்பப் பெறலாம்.

.