
இந்திய ரயில்வே, பல வகை சலுகைகளை பயணிகளுக்கு வழங்குகிறது. 25% முதல் 100% வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த கட்டணத் தள்ளுபடி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பல தரப்பட்ட பயணிகளுக்கு இந்தத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதே நேரம், ஐ.ஆர்.சி.டி.சியின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்யும்போது, மூத்த குடிமக்களுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படுகிறது. மற்ற தள்ளுபடிகளை, இந்திய ரயில்வேயின் நேரடி டிக்கெட் விற்பனை நிலையங்களில் மட்டுமே பெற முடியும். ரயில்வேயின் சலுகைகளை எப்படி பெருவது என்பது பற்றி இங்கே காணலாம்
- பயணிகள் மெயில், எக்ஸ்பிரெஸ் அல்லது பாஸெஞ்சர் ரயில் என எந்த ரயில் பயணித்தாலும் , கட்டணச் சலுகை மெயில் அல்லது எக்ஸ்பிரெஸ் ரயில்களின் கட்டணத்தை அடிப்படையாக வைத்தே வழங்கப்படும்.
- கட்டணாச் சலுகை அடிப்படை கட்டணத்தில் மட்டுமே வழங்கப்படும். கூடுதலாக விதிக்கப்படும், கட்டணங்களுக்கு சலுக கிடைக்காது.
- ஒரு பயணத்துக்கு, ஏதேனும் ஒரு சலுகை மட்டுமே கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு சலுகைகள் கொடுக்கப்படாது.
- ஒரு ரயிலில் இருந்து மற்றொரு இணைப்பு ரயிலுக்கு மாறிச் செல்லும் பயணங்களுக்கு சலுகை கிடையாது. ரயில் மாற்றம் ரயில்வேயால் செய்யப்பட்டால் மட்டுமே சலுகை செல்லும்
- மூத்த குடிமக்கள் சலுகைகளுக்குத் தவிர, மற்ற சலுகைகளுக்கு தகுந்த சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- டிக்கெட் பதிவுக்காக பயணிகள் சமர்ப்பிக்கும் ஃபார்மில், சலுகை தேவையென குறித்திருக்க வேண்டியது அவசியம். ஆன்லைன் டிக்கெட் பதிவுல் மூத்த குடிமக்கள் சலுகை மட்டுமே பெற முடியும்.
- சலுகை மூலம் பெறப்பட்ட டிக்கெட் மூலம், உயர் வகுப்பு பயணத்துக்கு மாற முடியாது. அதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்தினாலும், உயர் வகுப்பு பயணம் வழங்கப்படாது.
- சீசன் டிக்கெட், ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில் பயணங்களுக்கு சலுகை இல்லை.
- அனைத்து சலுகைகளையும், பயணச்சீட்டு பதிவு மையத்தில் பெறலாம்.
- டிக்கெட் இல்லாமலோ, சரியான டிக்கெட் இல்லாமலோ, சலுகை டிக்கெட்டில் பயணத்தை நீட்டித்தாலோ, உயர் வகுப்பு பயணத்துக்கு மாறினாலோ, அவருக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது, அல்லது வழங்கப்பட்ட சலுகை ரத்து செய்யப்படும்.