சென்னை வர்த்தக மையத்தில் நடைப்பெறும் சர்வதேச சுற்றுலா கண்காட்சி

சென்னை வர்த்தக மையத்தில், இந்தியா இன்டர்நேஷனல் டிராவல் மார்ட் சார்பில் சர்வதேச சுற்றுலா மற்றும் பயண கண்காட்சி நடத்தப்படுகிறது.

சென்னை வர்த்தக மையத்தில் நடைப்பெறும் சர்வதேச சுற்றுலா கண்காட்சி

சென்னை வர்த்தக மையத்தில், இந்தியா இன்டர்நேஷனல் டிராவல் மார்ட் சார்பில் சர்வதேச சுற்றுலா மற்றும் பயண கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கியமான சுற்றுலாப் பகுதிகள், புனித தலங்கள், சாகசப் பகுதிகள், கலாசார மற்றும் பண்பாட்டு இடங்கள், கடற்கரைகள், மலைகள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு வழிகாட்டியாக அமையும் வகையில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. 

u7ni61c8

 

dab29qug

குறைந்த கட்டணம் மற்றும் தவணைத் திட்டங்கள் மூலமாக சுற்றுலா செல்வதற்கான வழிமுறைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்தியா, நேபாளம், துபாய், தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 20-மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா வாரியங்கள், தேசிய அளவிலான சுற்றுலா ஏற்பட்டாளர்கள், சொகுசுக் கப்பல், விமானம் மற்றும் சுற்றுலா இணையதள நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.

rul7lltg

ஆகஸ்டு 3 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5ஆம் தேதி வரை, காலை 11 மணி முதல் இரவு 7.30 மணிவரை இந்தக் கண்காட்சி நடைப்பெறுகிறது. 

8gfld36o

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்: 8147013713 / 9844 235 673
 

More News