This Article is From Sep 20, 2018

பி.எஃப். மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

சிறுசேமிப்பு திட்டங்களான பி.எஃப், என்.எஸ்.சி. உள்ளிட்ட திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

பி.எஃப். மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

பி.எஃப்., என்.எஸ்.சி. போன்ற சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு இன்று மாற்றியமைத்துள்ளது. இதன்படி, இந்த இரு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தற்போதுள்ள 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்டுள்ள இந்த வட்டி விகிதம் வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் வரும் டிசம்பர் 31-ம் தேதிவரை இந்த விகிதம் நடைமுறையில் இருக்கும் என்றும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்ரம், சுகன்ய சம்ரிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகின்றன.
பி.எஃப். வட்டி விகித உயர்வு குறித்த தகவல்கள்
1. என்.எஸ்.சி., பி.எஃப். வட்டி விகிதம் 7.6-லிருந்து 8-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2. சீனியர் சிட்டிசன்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கான வட்டி 8.3-லிருந்து 8.7-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
3. கிசான் விகாஸ் பத்ரம் திட்டத்திற்கான வட்டி 7.7-ஆகவும், முதிர்நிலை காலம் 112-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
4. சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 0.4 உயர்த்தப்பட்டு 8.5 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது.
5. சேமிப்பு வைப்பு நிதிக்கான வட்டி 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

InstrumentRate of interest w.r.t. 01.07.2018 to 30.09.2018Rate of interest w.r.t. 01.10.2018 to 31.12.2018Compounding frequency
Savings Deposit44Annually
1 Year Time Deposit6.66.9Quarterly
2 Year Time Deposit6.77Quarterly
3 Year Time Deposit6.97.2Quarterly
5 Year Time Deposit7.47.8Quarterly
5 Year Recurring Deposit6.97.3Quarterly
5 Year Senior Citizen Savings Scheme8.38.7Quarterly and paid
5 Year Monthly Income Account7.37.7Monthly and paid
5 Year National Savings Certificate7.68Annually
Public Provident Fund Scheme7.68Annually
Kisan Vikas Patra7.3 (will mature in 118 months)7.7 (will mature in 112 months)Annually
Sukanya Samriddhi Scheme8.18.5Annually
(Source: Ministry of Finance)