Profit

தொடர் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு: 10 ஃபேக்ட்ஸ்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.32 ரூபாயாக வீழ்ந்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
தொடர் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு: 10 ஃபேக்ட்ஸ்

இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் என்றும் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.32 ரூபாயாக வீழ்ந்துள்ளது. ஆனால், விரைவில் ரூபாய் மதிப்பு மீளும் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர். துருக்கியில் நிலவி வரும் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் சீனாவின் பொருளாதார நிலை ஆகியவற்றின் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து கடந்த 13 மாதங்களாக உச்சத்தில் நிற்க, ஒட்டுமொத்த ஆசியவின் பண மதிப்பும் வீழ்ச்சிப் பாதையிலேயே உள்ளது. ஆனால், சர்வதேச நிதிநிலையின்படி அந்நிய முதலீடுகள் நிலையாகவே உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூபாய் வர்த்தகம் குறித்து அறிந்துகொள்ள வேண்டியவைகள்:

  1. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் என்றும் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.32 ரூபாயாக வீழ்ந்தது. மேலும், தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையிலேயே பயணித்த வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு கூடுதலாக 43 பைசாக்கள் வீழ்ந்து 70.32 ரூபாய் ஆக உள்ளது. காலை 9.13 மணி அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.25/26 ரூபாய் என்ற அளவில் உள்ளது. இதுவே கடந்த செவ்வாய்கிழமை வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு 69.90/91 என்ற ரீதியில் இருந்தது. நேற்று புதன்கிழமை தேசிய விடுமுறை என்பதால் பங்குவர்த்தகம் செயல்படவில்லை.
  2. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலவி வரும் வர்த்தகப் பற்றாக்குறையின் காரணமாகவே ரூபாய் மதிப்பு வீழ்வதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். “துருக்கியின் லிரா மதிப்பு மீண்டாலும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டேதான் உள்ளது. ரூபாயின் மதிப்பும் உலக சந்தை நிலைப்பெறும் போது மீண்டுவிடும். அடுத்த சில நாள்களுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சிப் பாதையில்தான் இருக்கும்” என பங்குவர்த்தக வல்லுநர் ருஷப் மாரு தெரிவித்துள்ளார்.
  3. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத உயர்வாக கடந்த ஜூலை மாதம் நிலவிய வர்த்தகப் பற்றாக்குறை 18.02 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விரிவடைந்து இருந்தது. குறிப்பாக எண்ணெய் இறக்குமதி உயர்வால்.
  4. ரூபாய் மதிப்பு அதிகரித்தாலும், சர்வதேச சந்தை நிலையால் அந்த உயர்வு நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்றே கூறப்படுகிறது.
  5. அமெரிக்க டாலர் மீதான இறக்குமதியாளர்கள் இடையே நிலவி வரும் தேவையையும் மீறி, உள்ளூர் பண மதிப்பின் அடிப்படையில் தான் மூலதன வெளியேற்றம் நிர்ணயிக்கப்படுகிறது.
  6. உருக்கு மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா விதிப்படுத்தியதை அடுத்து துருக்கி லிரா மட்டுமல்ல இந்திய ரூபாயின் மதிப்பும் சிக்கலில் உள்ளது.
  7. இதுகுறித்து அருண் ஜெட்லி கூறுகையில், “துருக்கி தொடர்பான வளர்ச்சிகள் சர்வதேச சந்தையில் மிகப்பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. இதுதான் அமெரிக்க டாலரின் மதிப்பை வலுப்படுத்துகிறது. ஆனால், இந்தியாவின் நிதிநிலைமை நீடித்த நிலைப்பதாகவே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
  8. சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் வர்த்தக குளறுபடிகளை சரிசெய்ய சீனா ஒரு குழுவை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்தது, சர்வதேச சந்தையில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
  9. சர்வதேச கச்சா எண்ணெய் மதிப்பு ஒரு பேரலுக்கு 70.93 டாலர்களாக உள்ளது.
  10. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி என்பது ஐடி துறைகளுக்கான சாதக சூழ்நிலை என்பதால் தொழில்நுத்ப பங்குகள் உச்சத்தில் உள்ளன. காலை 9.52 மணி அளவில் சென்செக்ஸ் 73.92 புள்ளிகள் வீழ்ந்து 37,778.08 புள்ளிகள் உடனும் நிஃப்டி 19.20 புள்ளிகள் வீழ்ந்து 11,415 புள்ளிகள் உடனும் உள்ளது.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top