Infosys நிறுவனத்திற்குள் மோசடி புகார் : உள்ளே நடப்பது என்ன...?

அந்தக் கடிதத்தில், சலீல் பரேக் மற்றும் நிலஞ்சன் ராய் இணைந்து பல காலாண்டுகளாக முறையற்ற மோசமான நடவடிக்கைகளைச் செய்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இரண்டு உயர் அதிகாரிகளும் மோசடி செய்ததற்கான இ மெயில் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் தங்களிடம் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள், இந்த நேர்மையான ஊழியர்கள். 

Infosys நிறுவனத்திற்குள் மோசடி புகார் : உள்ளே நடப்பது என்ன...?

கடந்த செப்டம்பர் 20, 2019 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரியக் ஐடி நிறுவனங்களில் ஒன்றான நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஒன்று. இன்ஃபோசிஸ் நிகர லாபத்தை உயர்த்திக் காட்ட பல மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாக நேர்மையான ஊழியார்கள் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளனர். 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் பல முறைகேடுகளை நிறுவனத்தில் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி (CFO) நிலஞ்சன் ராய்  செய்து இருக்கிறார்கள். 

அந்தக் கடிதத்தில், சலீல் பரேக் மற்றும் நிலஞ்சன் ராய் இணைந்து பல காலாண்டுகளாக முறையற்ற மோசமான நடவடிக்கைகளைச் செய்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இரண்டு உயர் அதிகாரிகளும் மோசடி செய்ததற்கான இ மெயில் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் தங்களிடம் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள், இந்த நேர்மையான ஊழியர்கள். 

கடந்த செப்டம்பர் 20, 2019 அன்று தான் இந்த தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு, இந்த நேர்மையான ஊழியர்கள், கடிதம் எழுதி இருக்கிறார்கள். 

இந்த குற்றச்சாட்டுகள் "உண்மையாக இருந்தால், குறிப்பாக ஐடி சேவை துறையில், நிறுவனத்தின்  பிராண்டை கடுமையாக சேதப்படுத்தும்" என்று ப்ளூம்பெர்க் புலனாய்வு ஆய்வாளர் அனுராக் ராணா எழுதினார். "இது குறுகிய கால விற்பனையையும் பாதிக்கலாம், ஏனெனில் வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களுக்கான பிற நிறுவனங்களைத் தேடலாம். 

“இந்த புகார் நிறுவனத்தின் நடைமுறைப்படி தணிக்கை குழுவின் முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் கொள்கைக்கு ஏற்ப இது தீர்க்கப்படும்” என்று மின்னஞ்சல் அறிக்கையில் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. 

ஹைலைட்ஸ்

  • 10 மாதத்தில் இல்லாத அளவிற்கு பங்கின் மதிப்பு சரிந்துள்ளது.
  • மோசடி செய்ததற்கான இ மெயில் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் உள்ளது.
  • நேர்மையான ஊழியர்கள் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
More News