Infosys நிறுவனத்தில் மோசடி : குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை

குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. இதனால், காலை வர்த்தகத்தில் பங்குகளின் விலை 6.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

Infosys நிறுவனத்தில் மோசடி : குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை

Infosys நிறுவனத்தில் மோசடி நடப்பதாக நேர்மையான ஊழியர்கள் புகார் கொடுத்திருந்தனர்

Bengaluru:

இன்ஃபோசிஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக நேர்மையான ஊழியர்கள் கொடுத்த புகாரில் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரியக் ஐடி நிறுவனங்களில் இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஒன்று. இன்ஃபோசிஸ் நிகர லாபத்தை உயர்த்திக் காட்ட பல மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாக நேர்மையான ஊழியர்கள் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளனர். 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் பல முறைகேடுகளை நிறுவனத்தில் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி (CFO) நிரஞ்சன் ராய்  செய்து இருக்கிறார்கள் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில், சலீல் பரேக் மற்றும் நிலஞ்சன் ராய் இணைந்து பல ஆண்டுகளாக முறையற்ற மோசமான நடவடிக்கைகளைச் செய்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இரண்டு உயர் அதிகாரிகளும் மோசடி செய்ததற்கான இ மெயில் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் தங்களிடம் இருப்பதாகவும் இந்த நேர்மையான ஊழியர்கள் சொல்லி இருந்தார்கள். 

இந்நிலையில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான  எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. இதனால், காலை வர்த்தகத்தில்  பங்குகளின் விலை 6.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 

“ குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்த இந்த அநாமதேய புகார்களுக்கு  எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை” என்று இன்ஃபோசிஸ் நவம்பர் 2 தேதியிட்டு தேசிய பங்குச் சந்தைக்கு கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

More News