Profit

இன்ஃபோசிஸ் நிறுவன காலாண்டு நிகர லாபம் 3,612 கோடியாக சரிந்தது

இன்ஃபோசிஸ், மார்ச் மாதம் முடிந்த வர்த்தக ஆண்டு முடிவில் 11.7% வளர்ச்சியோடு 16,029 கோடி ரூபாயை நிகர லாபமாக அறிவித்தது

 Share
EMAIL
PRINT
COMMENTS
இன்ஃபோசிஸ் நிறுவன காலாண்டு நிகர லாபம் 3,612 கோடியாக சரிந்தது

ஹைலைட்ஸ்

  1. முதல் காலாண்டின் நிகர லாபம் 3,612 கோடி ரூபாயாக உள்ளது
  2. கடந்த காலாண்டை விட 2.1% நிகர லாபம் குறைவு
  3. இன்ஃபோசிஸுக்கு 1 பில்லியன் டாலர் மதிப்புக்கு தொழில் வாய்ப்பு

இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஜூன் காலாண்டு முடிவை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், இந்த காலாண்டில் 3,612 கோடி ரூபாயை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது. இது கடந்த காலாண்டை விட 2.1% குறைவு. கடந்த காலாண்டின் நிகர லாபம் 3,690 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு ஜூன் காலாண்டு லாபம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜுன் காலாண்டில் நிகர லாபம் 3,483 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக வல்லுநர்களின் கணிப்பில், 3,740 கோடி ரூபாயாக நிகர லாபம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்த வருவாய் கடந்த காலாண்டுகளைக் காட்டிலும் இந்த காலாண்டில் 5.8% உயர்ந்துள்ளது. ஆண்டு கணக்கில் பார்த்தால் இது 12%. அதாவது 19,128 கோடி ரூபாய்.

“டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் எங்கள் நிறுவனம் செலுத்தும் முக்கியத்துவத்தை, வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடே இந்த வருவாய் அதிகரிப்பு” என்கிறார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக்.

“டிஜிட்டலில் 8% என்ற விகிதத்தில் தொழில் வளர்ந்து வருகிறது. அமெரிக்க சந்தை மதிப்பில் ஒரு பில்லியன் டாலருக்கான புதிய தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதில் 40% நிதித் துறை சேவைகள் தொடர்பானவை” என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் இராண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ், மார்ச் மாதம் முடிந்த வர்த்தக ஆண்டு முடிவில் 11.7% வளர்ச்சியோடு 16,029 கோடி ரூபாயை நிகர லாபமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலாண்டு முடிவு வெளியிடப்பட்டதை அடுத்து இன்ஃபோசிஸின் பங்குகள் 1.12% அதிகரித்து 1,309.10 ரூபாயாக வர்த்தகமானது.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top