Profit

IMF Chief: கல்வி, ஆரோக்கியத்திற்கு செலவிட்டு ஏற்றத்தாழ்வுகளை நீக்குங்கள்

மானியங்களுக்கு சரியாக இலக்கு வைக்கப்படவில்லை. செலவீனத்தின் அளவை மட்டுமல்லாமல் அதன் செயல் திறனையும் அரசு மேம்படுத்த வேண்டும்

 Share
EMAIL
PRINT
COMMENTS

நிர்மலா சீதாராமன் அறிவித்த கார்ப்பரேட் வரி விகிதக் குறைப்பு சரியான திசையில் நகர்வதாகத்தான் நம்புவதாக கீதா கூறினார்


ஹைலைட்ஸ்

  1. Government spending needs to be targeted well, says IMF's Gita Gopinath
  2. Corporate tax rate cut a move in right direction, the top economist adds
  3. IMF has lowered its forecasts for growth in India to 6.1% in 2019

கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்காக அதிக செலவு செய்வதன் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றத்தாழ்வுகளை நீக்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் அமெரிக்காவில் பிரத்யேக பேட்டியில்  NDTVயிடம் தெரிவித்தார்.

“சில நேரங்களில் அரசாங்கம் நிறைய செலவு செய்கிறது. ஆனால், அதற்கு சரியாக இலக்கு வைக்கப்படவில்லை. பயன்படுத்தப்படும் மானியங்களுக்கு சரியாக இலக்கு வைக்கப்படவில்லை. செலவீனத்தின் அளவை மட்டுமல்லாமல் அதன் செயல் திறனையும் அரசு மேம்படுத்த வேண்டும்” என்று கீதா கோபிநாத் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம் வளர்ச்சிக்கான கணிப்புகளை வெளியிட்டது அதில் 2019ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவீதமாகவும் அடுத்த ஆண்டில் 7.0 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டுமா என்று கேட்டதற்கு உயர்மட்ட பொருளாதார நிபுணர், “சிறந்த கல்வி மற்றும் மக்களுக்கு ஆரோக்கியம் மூலம் சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான பல வழிகளைப் பற்றி இந்தியா முதலில் சிந்திக்க வேண்டும். இவற்றிற்கு அதிக செலவு செய்வது சமத்துவமின்மையைக் குறைக்க உதவும்” என்றார். சமத்துவமின்மை இந்தியாவில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் ஒரு பெரிய பிரச்சினை என்று தெரிவித்தார்.

கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த கார்ப்பரேட் வரி விகிதக் குறைப்பு சரியான திசையில் நகர்வதாகத்தான் நம்புவதாக கீதா கூறினார்.

"சமீபத்திய கார்ப்பரேட் வரி குறைப்புக்கள் மற்றும் கிராமப்புற வருமான வளர்ச்சிக்கு உதவும் சமீபத்திய கொள்கைகள், இவை அனைத்தும் மீட்க உதவ வேண்டும்" என்றார்.

கார்ப்பரேட் வரிகளில் குறைப்பு என்பது நுகர்வோர் தேவையை அதிகரிப்பதற்கும் வளர்ச்சியை புதுப்பிப்பதற்கும் பலவிதமான அறிவிப்புகளில் ஒன்றாகும்.

இந்த ஆண்டு 6.1 சதவீதமாக மதிப்பிடப்பட்ட பின்னர், 2020 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7 சதவீதமாக மீட்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது என்று கீதா கோபிநாத் தெரிவித்தார். மேலும், "இது சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட சற்று குறைவான நம்பிக்கையுடன் உள்ளது. இது எங்கள் முந்தைய கணிப்பிலிருந்து குறைந்துவிட்டது" என்று அவர் கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஜூன் காலாண்டில் ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான 5 சதவீதமாக இருந்தது.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top