Profit

999 ரூபாய்க்கு விமான டிக்கெட் - இண்டிகோ நிறுவனம் சிறப்பு சலுகைத் திட்டம்

10 லட்சம் சீட்களுக்கு இந்த சலுகையைத் தருகிறது. இந்த சலுகை இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 6-ம் தேதி வரை மட்டுமே.

 Share
EMAIL
PRINT
COMMENTS
999 ரூபாய்க்கு விமான டிக்கெட் - இண்டிகோ நிறுவனம் சிறப்பு சலுகைத் திட்டம்

இண்டிகோ விமான நிறுவனம், 999 ரூபாய்க்கு பயண டிக்கெட்கள் வழங்கும் சிறப்பு ஆஃபரை அறிவித்துள்ளது. 59 இடங்களுக்கு, 10 லட்சம் சீட்களுக்கு இந்த சலுகையைத் தருகிறது. இந்த சலுகை இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 6-ம் தேதி வரை மட்டுமே. இந்த சிறப்பு சலைகையில், உள்நாட்டு பயணங்களுக்கு 999 ரூபாயும், சர்வதேச பயணங்களுக்கு 3,199 ரூபாய் மட்டுமே கட்டணம். பயண தேதி செப்டம்பர் 18,2018 முதல் மார்ச் 30, 2019 க்குள் இருக்க வேண்டும். மொபிக்விக் வேலட் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் 20% கேஷ்பேக், அதிகபட்சம் 600 ரூபாய் வரை கிடைக்கும்.

இந்த சலுகை பற்றி சில தகவல்கள்:

  1. செப்டம்பர் 6-ம் தேதி வரை மட்டுமே இந்த சலுகை செல்லும். பயண தேதிக்கு, குறைந்தது 15 நாட்களுக்கு முன் டிக்கெட் புக் செய்ய வேண்டும்.
  2. குறைந்த கால சலுகை என்பதால், டிக்கெட் இருப்பை பொறுத்தே சலுகை கொடுக்கப்படும்.
  3. விமான நிலைய கட்டணங்கள், அரசு வரிகள் இந்த சலுகையில் சேராது. அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும்.
  4. எங்கும் நின்று செல்லாத விமானங்களுக்கு மட்டுமே இந்த சலுகை
  5. ஒரு முறை புக் செய்தால், டிக்கெட்டை மாற்றவோ, பணத்தை திரும்பப் பெறவோ முடியாது.
  6. குழு முன்பதிவுகளுக்கு இந்த சலுகை செல்லுபடியாகாது.


Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top