This Article is From Jul 04, 2018

மும்பையில் வெளுத்து வாங்கும் மழை: ரயில்கள் ரத்து

இன்று சர்ச்கேட் மற்றும் விரார் இடையே செல்லும் மின்சார ரயில் சேவைகள் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன

மும்பையில் வெளுத்து வாங்கும் மழை: ரயில்கள் ரத்து

கன மழையால் ரயில்களின் சேவையை ரத்து செய்தது மேற்கு ரயில்வே

மும்பையில் இரண்டு நாட்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று அந்தேரியில் ரயில்வே மேம்பாலம் ஒரு பகுதியாக இடிந்து விழுந்ததால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரயில்களின் சேவையை ரத்து செய்தது மேற்கு கோட்ட ரயில்வே நிர்வாகம். இன்று இடுபாடுகள் ஒரு வழியாக அகற்றப்பட்டதால், ரயில் போக்குவரத்து தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முழுமையாக இல்லை.

மழை ஒருபுறம் தொடர்வதால் ரயில் போக்குவரத்தில் சற்று தடைகள் இருக்கின்றது. இன்று சர்ச்கேட் மற்றும் விரார் இடையே செல்லும் மின்சார ரயில் சேவைகள் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. ஒரு சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தேரி பகுதியை கடக்கும் போது பாதுகாப்பு கருதி ரயில்கள் 20 கிமீ வேகத்தில் இயக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

மத்திய ரயில்வே

இன்று பல இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களை மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. மும்பையில் கன மழை நீடிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பின்படி, ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ், மன்மாத் கோதாவரி எக்ஸ்பிரஸ், புனே சின்ஹாகாத் எக்ஸ்பிரஸ் மற்றும் புனே பிரகதி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.

.