
அரசாங்கம் வரும் ஆண்டுகளில் ரூ. 100 லட்சம் கோடியை செலவிடும் என்று கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- PM Modi reassured investors about their long-term bets on economy
- Government will spend Rs 100 lakh crore to develop infra: PM Modi
- PM Modi encouraged industry leaders to invest more in the economy
பொருளாதார மந்த நிலையிலிருந்து இந்தியா வலுவாக தன்னை வெளிப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் மீதான நீண்டகால சவால்களைப் பற்றி முதலீட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர். முந்தைய அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 3.5 சதவீதமாகக் குறைந்திருந்தது. பொருளாதாரம் கடந்த காலங்களிலும் ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. மந்தநிலையிலிருந்து வலுவாக வெளிப்படும் என்று தொழிற்துறை அமைப்பான அசோசம் (ASSOCHAM) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் உறையாற்றினர்.
ஜுலை- செப்டம்பர் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக உள்ள நிலையில் பிரதமர் மோடியின் கருத்துகள் வந்துள்ளன. இந்திய பொருளாதாரம் கடந்த 6 ஆண்டுகளை விட மெதுவான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான லட்சிய இலக்கை பிரதமர் மோடி அரசாங்கம் கொண்டுள்ளது.
நாட்டின் உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக அரசாங்கம் வரும் ஆண்டுகளில் ரூ. 100 லட்சம் கோடியை செலவிடும் என்று கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பெரு நிறுவன வரி விகிதத்தை குறைத்துள்ளது. முந்தைய அரசுகளின் வரி விகிதத்துடன் ஒப்பிடும் போதும் மிகவும் குறைவு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
“இன்று கார்ப்பரேட் வரி விகிதம் மிகக் குறைவு, மிகக்குறைந்த கார்ப்பரேட் வரியை வசூலிப்பது எங்கள் அரசாங்கம் மட்டுமே” என்று நடந்த அசோசம் நிகழ்வில் பிரதமர் மோடி கூறினார்.
5-6 ஆண்டுகளுக்கு முன்பு பேரழிவை நோக்கிச் சென்ற பொருளாதாரத்தை அரசு ஒழுக்கத்துக் கொண்டு வந்துள்ளது. தொழிற்துறை தலைவர்களை பொருளாதாரத்தில் அதிக முதலீடு செய்ய பிரதமர் மோடி ஊக்குவித்தார். “நீங்கள் சுதந்திரமாக முதலீடு செய்ய வேண்டும். வளர வேண்டும், யாருக்கும் எதிராக எந்த விசாரணையும் இருக்காது” என்று தொழிற்துறை தலைவர்களிடம் கூறினார்.