
நீண்ட கால அடிப்படையில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்கிறது எச்.டி.எஃப்.சி.
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தியை எச்.டி.எஃப்.சி. வங்கியின் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டின் அறிக்கைகளின்படி உலகிலேயே 6-வது மிகப்பெரும் பொருளாதார சக்தியாக இந்தியா இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் 2030-க்குள் உலகின் 3-வது பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்று எச்.டி.எஃப்.சி.-யின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கு போட்டியாக ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் உள்ளன. அதனுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம் உள்ளதாக எச்.டி.எஃப்.சி. கருதுகிறது. இதேபோன்று இந்தியாவில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கான ஓர் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சக்திமிக்க நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா உள்ளது. 2030-ல் 26 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிலும், 25.2 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு சீனாவிலும் வர்த்தகம் நடைபெறும் என்று எச்.டி.எஃ.சி. தெரிவித்துள்ளது. இதேபோன்று இந்தியாவில் 5.9 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)