இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை எரிபொருள் விலையேற்றம் பாதிக்கும்: ஆய்வில் தகவல்

இந்தியப் பொருளளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில், சரியான வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது

இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை எரிபொருள் விலையேற்றம் பாதிக்கும்: ஆய்வில் தகவல்

இந்தியப் பொருளாதாரம் மிகவும் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டுவருவதாக பொருளாதார வல்லுநர்கள் நடத்திய ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

இந்தியப் பொருளளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில், சரியான வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. 2 ட்ரில்லியன் டாலர் அளவிற்கான இந்தியப் பொருளாதாரம், பிரான்ஸை நாட்டை சமீபத்தில் முன்னேறி 6வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உருவாகியுள்ளது.

வருகிற மார்ச் 2019 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.6% இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனாவில் பொருளாதாரம் 6.6% மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் சீரான முறையில் வளர்ச்சி அடைந்து வந்தாலும், அதிகரித்து வரும் டீசல், பெட்ரோல் விலை பொருளாதார வளர்ச்சிக்கு சவால் வ்டும் வகையில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், ரூபாயின் மதிப்பு குறைவதன் மூலம், சிக்கல்கள் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

Newsbeep

எரிபொருள் விலையேற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்றும், கச்சா எண்ணெய் விலையேற்றத்தில் ஒவ்வொரு 10 டாலர் விலையேற்றத்திற்கும், 30-40 புள்ளிகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை மாற்ற உடனடியாக பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.