பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்படலாம் : ரிபோர்ட்

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சியின் கீழ் செய்யப்படும் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கான வரி விலக்கு வரம்பை உயர்த்தவும் நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்படலாம் : ரிபோர்ட்

ஜூலை 5 பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தனிநபர் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்படலாம்
  • தற்போதைய நிலையில் வரி விலக்கு பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தலாம்.
  • பொருளதார வளர்ச்சி 5.8% குறைந்துள்ளது.

நுகர்வு பொருளாதாரத்தை அதிகரிக்க பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பை அதிகரிக்க  நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உழைக்கும் வயது நபர்களுக்கான வரி விலக்கு வரம்பை ஆண்டு வருமானத்தில் ரூ.3,00,000 லட்சம் வரை அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. 

எந்தவொரு வரி விலக்குகளும் இந்த ஆண்டு கடுமையான மந்தமான பொருளாதாரத்திற்கு  வழிவகுக்கும். ஆண்டின் முதல் 3 மாதங்களில் நாட்டின் வளர்ச்சி 5.8 சதவீதம் குறைந்துள்ளது.  

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 சியின் கீழ் செய்யப்படும் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கான வரி விலக்கு வரம்பை உயர்த்தவும் நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.  

பட்ஜெட் விவாதங்கள் ரகசியமாக இருப்பதால் நிதி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டி.எஸ். மாலிக் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். ஜூலை 5 பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com