வருமான வரி தாக்கல் : எப்படி செய்வது? என்ன தேவை? தவிர்க்க வேண்டிய தவறுகள்

வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) என்பது நடப்பு ஆண்டின் வருமானம் தொடர்பான வரி விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்கும் முறை

வருமான வரி தாக்கல் : எப்படி செய்வது? என்ன தேவை? தவிர்க்க வேண்டிய தவறுகள்

வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) என்பது நடப்பு ஆண்டின் வருமானம் தொடர்பான வரி விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்கும் முறை. உங்களுடைய ஒட்டுமொத்த ஆண்டு வருமானம், குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் ( மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம், மூத்த குடிமக்களுக்கு ரூ. 3 லட்சம், மற்றவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் என்கிற அளவு) வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்வது கட்டாயமாகிறது. இதே விதி பிரிக்கப்படாத இந்து குடும்பங்களுக்கும், டிரஸ்ட்களுக்கும் பொருந்தும். நிறுவனங்கள், வெளிநாட்டில் சொத்து வைத்திருக்கும் இந்தியர்கள் அவர்களுடைய மொத்த வருமானத்துக்கும் வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்வது கட்டாயமாகிறது.

தனிநபர்களுக்கு வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்ய ஜூலை 31 தான் கடைசி நாள். வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்வது பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அதற்கான பதில்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

எவ்வாறு வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்வது?

வருமான வரி விவரத்தை (ரிட்டர்ன்ஸ்) ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட வேண்டும், அதற்கு incometaxindiaefiling.gov.in என்கிற இணையதளத்தில் சென்று பதிவு செய்திட வேண்டும், என்கிறார் என்.ஏ.ஷா நிறுவனத்தின் நிறுவனர் அசோக் ஷா. உங்கள் பதிவை உறுதி செய்ய ஒரு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஓடிபி) உங்கள் மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். வருமான் வரி ஆவணங்களை ஆன்லைனில் நேரடியாகவோ அல்லது XML ஃபைலாகவோ பதிவேற்றுவதன் மூலமும் தாக்கல் செய்யலாம்.

ஒருமுறை ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அது உறுதி செய்யப்பட வேண்டும்.. அதற்கு நெட் பேங்கிங் அல்லது ஆதார் ஓடிபி மூலம் electronic verification code எண்ணை பெற்று உறுதி செய்யலாம். அல்லது, ரிட்டர்ன் ஃபைல் செய்ததன் நகலை பெங்களூருவில் உள்ள மத்திய செயலாக்க மையத்திற்கு அனுப்பியும் உறுதி செய்யலாம் என்கிறார் ஷா.

வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்

ஐடிஆர் ரிட்டன்ஸ் படிவங்களை சமர்ப்பிக்கும் போது, எந்த விதமான ஆவணங்களும் இணைக்கப்படத் தேவையில்லை. முதலீடு செய்ததற்கான சான்று, டி.டீ.எஸ் போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டிய தேவையில்லை. ஐ.டி.ஆர் படிவத்தை நேரடியாக சமர்ப்பித்தாலும் ஆன்லைனில் சமர்ப்பித்தாலும் எந்த விதமான ஆவணமும் இணைக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் இந்த ஆவணங்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் வருமான வரித்துறை அதிகாரிகள் தீடீர் விசாரணைக்காக ஆவணங்களைக் கேட்க்கக் கூடும்

முக்கியமான ஆவணங்கள் ஃபார்ம் 16, முதலீட்டிற்கான ஆதாரங்கள், வீட்டு வாடகைக்கான ரசீதுகள், காப்பீடு ரசீதுகள், கடன் திருப்பி செலுத்தும் ஆவணங்கள், மருத்துவ ரசீதுகள் ஆகியவற்றை சேகரித்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

வருமான வரி வரம்புகளுக்கான விவரம் இங்கே
 

income tax slabs 2017 18

நீங்கள் சொந்தமாக வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்கிறீர்கள் என்றால், இந்த செய்யக் கூடாத தவறுகள்:

  • சம்பள வருமானம், முதலீடுகள், வரி பிடித்தங்கள் மற்றும் வங்கி கணக்கு எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை சரியாக பதிவு செய்யுங்கள். இதில் தவறுக்கு இடம் இல்லை.
  • நீங்கள் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டியை உங்களுடைய ஒட்டுமொத்த வருமானத்தில் சேர்க்க மறந்துவிடுவீர்கள். ஒரு சிலர் அவர்கள் வைத்திருக்கின்ற அனைத்து வங்கி கணக்குகளையும் குறிப்பிட மறந்திடுவார்கள். அனைத்து தகவல்களையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்..
  • பொது வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வட்டி வருமானங்களை சேர்க்க மறந்து விடாதீர்கள்.
  • நீங்கள் தவறான ஐ.டி.ஆர் படிவத்தை தேர்வு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. கவனம் தேவை
  • வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்த பிறகு அதை சரிபார்த்து உறுதி செய்ய மறந்துவிடக்கூடாது. இணையத்தில் electronic verification code வழியாகவோ அல்லது ஆவண நகலை வருமான வரித் துறையினருக்கு நேரடியாக அனுப்பியும் சரிபார்க்கலாம்.
Listen to the latest songs, only on JioSaavn.com