Profit

வருமான வரி தாக்கல்: காலக்கெடுவை நீட்டித்தது நிதி அமைச்சகம்

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
வருமான வரி தாக்கல்: காலக்கெடுவை நீட்டித்தது நிதி அமைச்சகம்

நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம்தான் (CBDT) வருமான வரித்துறையின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் உச்ச அமைப்பாகும்.


2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 என்று இருந்த நிலையில், அதை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்புகளை சற்றுமுன் வெளியிட்டது.
இதனால் ஆகஸ்ட் 31 வரை எந்தவித தண்டத்தொகையும் இன்றி வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம்.

"2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய 31/7/2018 கடைசி நாள். இது குறித்து நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் (CBDT) கூடி ஆலோசித்தது. அதில் இக்கெடுவை, குறிப்பிட்ட பகுப்புகளைச் சேர்ந்த வரி செலுத்துநர்களுக்கு மேலும் ஒரு மாத காலம் (ஆகஸ்ட் 31வரை) நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று மத்திய நிதியமைச்சகம் டிவீட் செய்துள்ளது.

நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம்தான் வருமான வரித்துறையின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் உச்ச அமைப்பாகும்.

கடந்த 2017-18 நிதியாண்டில் 6.84 கோடிப் பேர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருந்தனர். இது அதற்கு முன் ஆண்டில் 5.43 கோடிப் பேர் தாக்கல் செய்ததைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top