வருமான வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு!! - விவரம் உள்ளே!

வருமான வரியை உரிய காலத்திற்குள் செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு!! - விவரம் உள்ளே!

வரி செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி (Income Tax Return (ITR)) செத்துவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ம்தேதி வரை மட்டுமே விதிக்கப்பட்டிருந்தனது. 

இந்த நிலையில் இதனை அடுத்த மாதமான ஆகஸ்ட் 31-ம்தேதி வரைக்கும் நீட்டித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 


முன்னதாக டிடிஎஸ் எனப்படும்  tax deducted at source (TDS) ஆவணங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தது. சுமார் 25 நாட்கள் டிடிஎஸ் தாக்கல் செய்ய நாட்கள் அதிகரிக்கப்பட்டு ஜூலை 10-ம்தேதி வரைக்கும் கெடு விதிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து வருமான வரியை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில், காலக்கெடு நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு