வருமான வரியின் முதற்கட்ட தவணைக்கு இன்னும் மூன்று நாட்களே!

இந்த ஆண்டுக்கான வருமான வரியின் முதற்கட்ட தவணையை செலுத்த இன்னும் மூன்று நாள்களே கால அவகாசம் உள்ளது

வருமான வரியின் முதற்கட்ட தவணைக்கு இன்னும் மூன்று நாட்களே!

ஹைலைட்ஸ்

  • வரி செலுத்த இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே பாக்கியுள்ளது
  • உங்களது வரி இந்தியாவுக்கான புன்னகையை அளிக்கும், வருமான வரித்துறை
  • 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி செலுத்துவதில் தனி சலுகை இருக்கிறது
இந்த ஆண்டுக்கான வருமான வரியின் முதற்கட்ட தவணையை செலுத்த இன்னும் மூன்று நாள்களே கால அவகாசம் உள்ளது. இது குறித்தான வருமான வரித் துறையினரின் அறிவிப்பு ட்விட்டரில் வெளியாகி உள்ளது.

அதில், “உங்களது வரி இந்தியாவுக்கான புன்னகையை அளிக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு பான் எண்ணை இணைப்பது அவசியம் ஆகிறது. பான் எண் என்பது வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வருமான வரித்துறையினரால் தரப்படும் பதிவு எண் ஆகும்.

வருமான வரி செலுத்துவதற்கு முன்னர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

முன்கூட்டிய வருமான வரித்தவணையை செலுத்துவதற்கான தகுதிகள்,

இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி செலுத்தும் நிலையில் உள்ளவரோ, ஊதியம் பெறும் பணியாளரோ, வரிப்பிடித்தம் 10 ஆயிரம் அல்லது அதற்கு மேலானதாக இருப்பின் முன் தவணை செலுத்தலாம்.

மூத்த குடிமக்கள் அதாவது 60 வயதுக்கு மேற்பட்டோர் தங்களுக்கென வருமானம் ஏதும் இல்லையென்றால் வரி செலுத்துவதில் இருந்து விலக்கப்படுவார்கள்.

சட்ட விதி எண் 44ஏபி அடிப்படையிலான வருமான வரி செலுத்தும் அவசியம் உள்ள தொழில் செய்வோர் வருமான வரியாக செலுத்த வேண்டிய மொத்தத் தொகையையும் ஜூன் 15-ம் தேதிக்கு முன்னரே மொத்தமாக செலுத்திவிட வேண்டும்.

பணம் செலுத்தும் விதம்,

கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் இ- பேமன்ட் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். மேலும் வருமான வரிச் சட்டம் 44ஏபி-யின் கீழ் கணக்கிடப்படும் வருமான வரித்தொகையை செலுத்துவோரும் இ- பேமன்ட் முறையிலேயே வரி செலுத்த வேண்டும்.

இதர வரி செலுத்துவோரும் வேண்டுமானால் இ- பேமன்ட் முறையில் வரி செலுத்திக் கொள்ளலாம்.

ஜூன்-15, இறுதிநாள்,

1. வருமான வரி செலுத்துவோர் மொத்தத் தொகையில் 15% தொகையை முன் தவணையாக செலுத்த வேண்டும்.
2. 45% முன் தவணைத் தொகையை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
3. 75% முன் தவணைத் தொகையை டிசம்பர் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
4. மார்ச் 15-ம் தேதிக்குள் மொத்தத் தொகையையும் செலுத்திவிட வேண்டும்.

வரி செலுத்த வேண்டிய ஊதியம் பெருவோருக்கு 40 ஆயிரம் ரூபாய் கழிக்கப்படும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பிடித்தம் செய்யப்படும் ஊதியத் தொகையை பணியாளர்கள் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
Listen to the latest songs, only on JioSaavn.com