Profit

ஆட்டோமொபைல் துறையில் 42 பில்லியன் டாலர் சரிவு... காரணம் என்ன?

கடந்த 16 மாதங்களில் இந்திய கார் பங்குகள் 42 பில்லியன் டாலர்கள் இழந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஆட்டோமொபைல் துறையில் 42 பில்லியன் டாலர் சரிவு... காரணம் என்ன?

டாப் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர்


ஹைலைட்ஸ்

  1. மாருதி சூசுகி, ஹீரோ முதலிய நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது
  2. இரண்டு நிறுவனங்கள் மட்டுமே வளர்ச்சியை சந்தித்துள்ளது
  3. வீழ்ச்சி தொடரும் என எச்சரித்துள்ளனர்

இந்தியாவில் ஆட்டோமொபைல் மார்கெட் பங்குகள் வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. கடந்த 16 மாதங்களில் இந்திய கார் பங்குகள் 42 பில்லியன் டாலர்கள் இழந்துள்ளது.

டிசம்பர் 2017 யில் உயர்வை கண்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள், அடுத்த 16 மாதங்களில் 30 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு வரை உலகில் விரைவாக வளர்ந்து வரும் கார் மார்கெட்டாக கருதப்பட்டது இந்தியாவின் கார் மார்கெட். ஆனால் இந்த முறை மாருதி சூசுகி, ஹீரோ மோட்டர்கார்ப் லிமிடெட், மஹிந்திரா மற்றும் மஹிந்திரா ஆகிய டாப் நிறுவனங்களின் பங்குகள் 20 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.

6oattoc

‘எதிர்பார்ப்பு விட தேவை குறைவாக இருப்பதால் தான் இந்த வீழ்ச்சி' என நோமுரா ஹோல்டிங்ஸ் லிமிட். சேர்ந்த கபில் சிங் மற்றும் சித்தார்த் பேரா எழுதியுள்ளனர்.

பாசஞ்சர் கார்களை பொருத்தவரை 2014 ஆண்டை தொடர்ந்து 2017-2018 நிதியாண்டில் தான் வளர்ச்சி குறைவாக உள்ளது. இந்தியாவில் பெரிய கார் நிறுவனமான மாருதி சூசுகி, ஏப்ரல் மாதத்தில் 17 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது.

S&P BSE Auto Index தகவலின் படி, 16 நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே வளர்ச்சியை சந்தித்துள்ளது. டாடா மோட்டர்ஸ் லிமிடெட் மற்றும் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான் அவை. பஜாஜ் ஆட்டோ லிமிடெட் 11 சதவிகிதம் உயர்வை பதிவு செய்தது.

R&D யில் அதிக முதலீடு செய்வதே சிறந்த ஆட்டோமொபைல் நிறுவனத்தின் அடையாளம் என கோல்ட்மேன் சாஸ் குழுமத்தை சேர்ந்த பிரமோத் குமார் மற்றும் அனுபாவ் பாஜ்பாய் தெரிவித்தனர். இருப்பினம் இனி சில காலங்களுக்கு இந்த சரிவிற்கு தீர்வில்லை எனவும் எச்சரித்துள்ளனர்.   



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top