வரி உயர்வு எதிரொலி! இந்தியாவில் தங்கம் இறக்குமதி 55 சதவீதம் சரிந்தது!!

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின்போது வெளிநாடுகளில் இருந்து 88.16 டன் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது.

வரி உயர்வு எதிரொலி! இந்தியாவில் தங்கம் இறக்குமதி 55 சதவீதம் சரிந்தது!!

இறக்குமதி வரி உயர்வு தங்கத்தின் இறக்குமதி குறைந்ததற்கு முக்கிய காரணம்

உள்ளூர் சந்தையில் விலை உயர்வு, இறக்குமதிக்கான வரி உயர்வு உள்ளிட்டவை காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு 55 சதவீதம் வரை குறைந்துள்ளது. 

ஆபரண சந்தையை பொருத்தளவில் உலகில் தங்கத்திற்கு டிமாண்ட இருக்கும் 2-வது மிகப்பெரும் நாடாக இந்தியா உள்ளது. முன்பு தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவீதமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த பட்ஜெட்டின்போது அதனை 12.5 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதேபோன்று சர்வதேச காரணங்களால் உள்ளூர் சந்தைகளில் தங்கத்தின் விலையும் உயர்ந்திருக்கிறது. 

கடந்த 2018 ஜூலை மாதத்தில் 88.16 டன் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. அது தற்போது 55 சதவீதம் வரை குறைந்து 39.66 டன்னாக உள்ளது. 

2018-19-ல் மட்டும் ரூ. 2.32 லட்சம் கோடி அளவுக்கு இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.