அனில் அம்பானிக்கு எதிரான தீர்ப்பால் ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் சரிந்தன

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி மீது சோனி எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அனில் அம்பானிக்கு எதிரான தீர்ப்பால் ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் சரிந்தன

எரிக்சன் இந்தியா நிறுவனத்திற்கு அனில் அம்பானி ரூ. 453 கோடி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சோனி எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அனில் அம்பானிக்கு எதிராக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் சரிவை சந்தித்திருக்கின்றன.

மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனின் பங்குகள் 9.46 சதவீதமும் (ரூ.5.45), ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்ஸின் பங்குகள் 8.75 சதவீதமும் (ரூ. 111.50), ரிலையன்ஸ் கேப்பிடல் பங்குகள் 10.26 சதவீதமும் (ரூ. 135.95), ரிலையன்ஸ் பவர் 5.53 சதவீதமும் (ரூ. 10.25), ரிலையன்ஸ் நேவல் அண்டு எஞ்சினியரிங்கின் பங்குகள் 8.56 சதவீதமும் (ரூ. 8.22) மற்றும் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸின் பங்குகள் 4.26 சதவீதமும் (ரூ. 24.70) சரிந்துள்ளன.

சோனி எரிக்சன் நிறுவனம், தங்களுக்கு கொடுக்க வேண்டிய 453 கோடி ரூபாய் தொகையை அனில் அம்பானி கொடுக்காமல் இருக்கிறார் என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.

Newsbeep

அந்த வழக்கில்தான் அனில் அம்பானி குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 வாரத்துக்குள் தொகையை செலுத்தவில்லை என்றால், அனில் அம்பானி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.