ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய தவரினால் 10,000 அபராதம்

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நீங்கள் ஐ.டிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் ரூ. 10000 வரை அபராதம் விதிக்கப்படும்

ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய தவரினால் 10,000 அபராதம்

வருமான வரி விவரம் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி நாள்

நீங்கள் வரி செலுத்தும் வரம்பிற்குள் இருந்தால் கட்டாயம் வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரித் துறையினர் 2017 - 18 ஆண்டிற்கான வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்யக்கோரி வரிசெலுத்துபவர்களை நினைவுபடுத்தி வருகின்றனர். இறுதி நேர அவசரத்தை தவிர்க்க ஜூலை 31-ம் தேதிக்கு முன்னரே பதிவு செய்துவிடுதல் நல்லது. ஒருவேலை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நீங்கள் ஐ.டிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் ரூ. 10000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் ஐடிஆர் தாக்கல் செய்வதில் ஏற்படும் கால தாமதத்தால் வட்டி செலுத்த வேண்டிய தேவையும் வரும்.

நீங்கள் நேரத்திற்கு வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்யவில்லை என்றால் இந்த ஐந்து விஷயங்கள் நடக்கும்.

1) அபராதம்:

 
குறிப்பிட்ட தேதிக்குள்ளாக ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்கிற சூழலில் மூன்று கட்ட அபராதம் விதிக்கும் முறை அமலில் உள்ளது. முதலில் ஐடிஆர் காலக்கெடு முடிந்து டிசம்பர் 31-ற்கு முன்பாக தாக்கல் செய்தால் ரூ. 5000 அபாராதமாக செலுத்த வேண்டியிருக்கும். மற்ற சந்தர்ப்பங்களில் அபாராதத் தொகை ரூ. 10000 ஆக இருக்கும். எனினும் வரி செலுத்துபவர்களின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 5,00,000-ற்கும் குறைவாக இருந்தால் ரூ. 1,000 அபாராதமாக செலுத்தினால் போதும். என என்.ஏ. ஷா அசோசியேட்ஸ் நிறுவன பங்குதாரர் அசோக் ஷா தெரிவித்தார்.

2) வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) திருத்தம் செய்வதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்து அதில் தவறு செய்துவிடுகிறீர்கள் என்றால், மாற்றப்பட்ட விதிகளின் படி நீங்கள் திருத்தம் செய்துகொள்ள மார்ச் 2019 (2017-2018 நிதி ஆண்டிற்கான ஐடிஆர்) வரை மட்டுமே கால அவகாசம் உண்டு. முன்னர் இந்த கால அவகாசம் இரண்டு ஆண்டுகள் இருந்தது, தற்போது நிதி ஆண்டின் முடிவிலிருந்து ஒராண்டு என குறைக்கப்பட்டுள்ளது. எனவே எவ்வளவு முன்பாக நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்கிறீர்களோ அதைப்பொருத்து ஐடிஆரில் பிழை ஏதேனும் இருந்தால் திருத்தம் செய்து கொள்ள கால அவகாசம் அதிகமாக கிடைக்கும், என க்ளியர் டேக்ஸ் நிறுவனர் அர்ச்சிட் குப்தா தெரிவித்துள்ளார்.

3) வரித்தொகையில் வட்டி செலுத்த வேண்டும்

குறித்த காலத்திற்குள்ளாக வருமான வரி விவரம் (ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்யவில்லை என்றால், மாதத்திற்கு 1% என வட்டி விகிதம் ஐடிஆர் தாக்கல் செய்கிற தேதி வரை பிடித்தம் செய்யப்படும். இந்த வட்டியை டிடீஎஸ் (ஆதாரத்தில் கழிக்கப்பட்ட வட்டி), டிசிஎஸ் (ஆதாரத்தில் பெறப்பட்ட வட்டி), கூடுதல் வட்டிகள் மற்றும் பிற சலுகைகள் என அனைத்தையும் கழித்த தொகையில் செலுத்த வேண்டும் என சீராக் சோர்டியா தெரிவித்துள்ளார். 

4) இழப்புகளை கணக்கில் கொள்ள முடியாது

குறிப்பிட்ட தேதிக்குள் ஐடிஆர் பதிவு செய்யப்படவில்லை என்றால், வரி செலுத்துபவர் "லாபம் மற்றும் வணிகம் அல்லது தொழில் லாபங்கள்" அல்லது "மூலதன லாபங்கள்° என்கிற பிரிவின் கீழ் எந்தவொரு இழப்பையும் கணக்கில் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனினும் " வீடு சொத்தின் மூலம் வருகிற வருமானங்கள்" என்ற பிரிவின் கீழ் வருகிற இழப்புகள் கணக்கில் கொள்ள அனுமதிக்கப்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

5) வருமான ரிட்டர்ன்கள் செயல்படுத்துவதில் கால தாமதம்

ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகு பெங்களூருவில் உள்ள மத்திய செயலாக்க மையம் வருமான வரி ரிட்டர்ன் செய்யும் நடைமுறைகளை மேற்கொள்ளும். அதற்கு பிறகு தான் வரிப்பணத்தை திரும்ப செலுத்துவது தீர்மானிக்கப்படுகிறது. எனவே வரி செலுத்துபவர் பணத்தை திரும்பப் பெறும்போது, ஐடிஆர் தாமதமாக தாக்கல் செய்தால் அதை செயல்படுத்துவதிலும் தாமதம் ஏற்படும்.

Listen to the latest songs, only on JioSaavn.com