ஃபிக்ஸட் டெபாஸிட்டின் வட்டி விகிதத்தை அதிகரித்தது ஐசிஐசிஐ வங்கி

அதிகரித்த வட்டி விகிதம், நாளை முதல் (நவம்பர் 15, 2018) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

ஃபிக்ஸட் டெபாஸிட்டின் வட்டி விகிதத்தை அதிகரித்தது ஐசிஐசிஐ வங்கி

உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரும்

ஐசிஐசிஐ வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிலையான வைப்புத் தொகை திட்டங்களுக்கு (Fixed Deposit) வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. வட்டி விகித அதிகரிப்பு தகவலை இன்று வெளியீட்டுள்ளது.

அதிகரித்த வட்டி விகிதம், நாளை முதல் (நவம்பர் 15, 2018) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.

வட்டி விகிதம் மாற்றப்பட்ட பின் பொதுப்பிரிவினர்க்கு 7.5 சதவீதமாகவும் மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதமாகும் உள்ளது. இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையான நிலை வைப்புத் தொகைக்கு மட்டுமே இந்த வட்டி விகிதம் பொருந்தும் என்று ஐசிஐசிஐ வங்கி கூறியுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) தொடங்ககூடிய வங்கி கணக்குகளான என்.ஆர்.ஓ (non-resident ordinary)மற்றும் என்.ஆர்.இ (non-resident external) ஆகிய வங்கி கணக்குகள் ரூ.1கோடி வரையிலான வைப்புத் தொகைக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும்.
 

Maturity PeriodInterest rates (per annum)
Term deposits of less than Rs 1 crore
New rates (with effect from  November 15)Increase in basis points (bps)
7 days to 14 days4.00%-
15 days to 29 days4.25%-
30 days to 45 days5.50%-
46 days to 60 days6.00%25 bps
61 days to 90 days6.25%25 bps
91 days to 120 days6.25%25 bps
121 days to 184 days6.25%25 bps
185 days to 289 days6.50%-
290 days to less than 1 year6.75%-
1 year to 389 days6.90%15 bps
390 days upto  2 years7.10%10 bps
2 years 1 day upto 3 years7.50%25 bps
3 years 1 day upto 5 years7.25%-
5 years 1 day upto 10 years7.00%-
5 years (80C FD)7.25%-

நிதிச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் பணப்புழக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வங்கி வாடிக்கையாளர்கள் கூடுதல் நன்மையை பெறும் வகையில் வட்டி விகிதம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வங்கியின் சீனியர் ஜெனரல் மேனேஜர் பிரணவ் மிஸ்ரா கூறியுள்ளார்.

தற்போது ஐசிஐசிஐ வங்கி நிலையான வைப்புத் தொகைக்கான (Fixed deposit) பல்வேறு திட்டங்களை வைத்துள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையான வெவ்வேறு முதிர்வு காலத் திட்டங்களை வைத்துள்ளது.