Profit

ஜி.எஸ்.டியால் வேலை இழந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்க்ள்

ஜி.எஸ்.டிக்கு பிறகு ஒரு சிலவற்றை தவிர அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இருக்கின்றது

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜி.எஸ்.டியால் வேலை இழந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்க்ள்

பானிப்பட் இந்தியாவின் டெக்ஸ்டைல் நகரம் என்று கூறப்படுகிறது. இங்கு பல சிறு குறு, ஆடை நெய்யும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஆனால், ஜி.எஸ்.டிக்கு பிறகு ஒரு சிலவற்றை தவிர அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இருக்கின்றது.

நாட்டின் வரி வருவாயை, முறைப்படுத்தவும் ,அதிகரிக்கவும் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டியின் சிக்கலான நடைமுறையால், சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டனர். பல்லாயிரக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

இந்த வேலை இழப்பு 2019 தேர்தலில் மோடிக்கு கடும் நெருக்கடியை தரும். பானிப்பட் நகரில் ஆடை நெய்யும் ஆலை வைத்திருக்கும் பத்லா கூறுகையில் “ நான் ஜி.எஸ்.டியில் பதிவு செய்துள்ளேன். ஆனால் என்னிடம் தொழில் செய்பவர்கள் இந்த ஜிஎஸ்டி நடை முறைய பின்பற்ற முடியாமல் இருக்கின்றனர். அவர்களிடம் கணினி இல்லை. ஒரு அக்கவுண்டென்டுக்கு பணம் செலுத்த முடியவில்லை. அனைவரும் சிறிய வியாபாரிகள். இதனால் விற்பனை குறைந்துள்ளது. 10 லட்சம் ரூபாய் வந்த இடத்தில் 2.5 லட்சம் ரூபாய் தான் வருகிறது” என்கிறார்.

ஜி.எஸ்.டி நடைமுறையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக மாற்றி வருவதாகவும், சிறு குறு தொழி நிறுவனங்களில் கருத்துகளை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் நிதி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டி.எஸ்.மலைக் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் வேலையின்மை குறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஏ.ஐ.டி.யூ.சி நடத்திய ஆய்வில் 111 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கியும், பொருளாதாரத்தில் 32% பங்குவகிக்கும் 6.3 கோடி சிறு குறு தொழில்களில் ஐந்தில் ஒரு பங்கு தொழில்களில் லாபம் 20% குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஜி.எஸ்.டியால் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளையும் வேலையில் இருந்து அனுப்ப வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணிப்பு படி, கடந்த ஆண்டு மட்டும் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இவற்றில் சிறு தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை என்கிறது.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 6.4% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4.1% ஆக இருந்தது. கூடுதலாக 1.7 கோடி பேர் வேலையில் சேர்ந்த போதும் இந்த நிலை நீடிக்கிறது.

ஜி.எஸ்.டி 29 மாநிலங்களுக்கு இடையே இருந்து உள்ளூர் வரி விதிப்பை அகற்றி ஒரே வரி விதிப்பாக மாற்றியுள்ளது. ஆனால், இது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருந்தன என்கிறார்கள் விமர்சகர்கள்.

சுதந்திர தின உரையில் பிரதமர் “ ஜி.எஸ்.டியால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், சவாலை ஏற்றுக் கொண்டனர். அதனால், தேசம் இப்போது வளர்ச்சியை நோக்கி முன்னேறுகிறது” என்கிறார்.

ஆனால், ராகுல் காந்தி வேலை இழப்பு மற்றும் மூடப்பட்ட தொழில்களை சுட்டிக் காட்டுகிறார். “ ஜி.எஸ்.டி ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொண்டது” என்று குற்றம் சாட்டுகிறார்.

பிரதமர் மோடியின் பாப்புலாரிட்டி 53% இருந்து 50% ஆக குறைந்துள்ளது. அதே நேரம் ராகுல் காந்தியில் பாப்புலாரிட்டி 22% இருந்து 27% ஆக அதிகரித்துள்ளது என்கிறது இந்தியா டுடே கணிப்பு. தேர்தல் நெருங்கும் போதுதான், மோடிக்கான உண்மையான நெருக்கடி தெரியவரும்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.Get the latest election news, live updates and election schedule for Lok Sabha Elections 2019 on ndtv.com/elections. Like us on Facebook or follow us on Twitter and Instagram for updates from each of the 543 parliamentary seats for the 2019 Indian general elections.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top