தினசரி பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை எஸ்எம்எஸ்-ல் பெறுவது எப்படி?

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தற்போது தினசரி அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. மேலும் எரிபொருள் நிலையங்களில் இந்த விலை மாற்றங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.

தினசரி பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை எஸ்எம்எஸ்-ல் பெறுவது எப்படி?

இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து வருகின்றன.

மத்திய அரசு நடத்தி வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தினசரி பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை எஸ்எம்எஸ் சேவை மூலம் தெரிவித்து வருவது உங்களுக்கு தெரியுமா?. 

நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒரு எஸ்எம்எஸ் அடிப்படையிலான சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் நுகர்வோர்கள் தங்களது மொபைல் போனிலே சமீபத்திய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்த தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம். 

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. மேலும் எரிபொருள் நிலையங்களில் இந்த விலை மாற்றங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

எஸ்எம்எஸ்-ல் பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை தெரிந்துகொள்வது எப்படி?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணையதளம் கொடுத்துள்ளள தகவலின் படி, இந்த எஸ்எம்எஸ் சேவையை பெற 9224992249 என்ற எண்ணுக்கு கீழ்கண்ட வகையில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். 

RSP<space>பெட்ரோல் நிலையத்தின் டீலர் குறியீட்டை குறிப்பிட வேண்டும்

இதைத்தொடர்ந்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் எஸ்எம்எஸ் மூலம் தொடர்ச்சியாக தினசரி விலை நிலவரத்தை தங்களுக்கு தெரியப்படுத்திவிடும். 

இந்தியன் ஆயில் அளித்த தகவலின் படி, 41 நகரங்களின் பெட்ரோல் நிலைய டீலர் குறியீட்டு எண் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

CitySMS TextCitySMS TextCitySMS Text
AgartalaRSP 159850GurgaonRSP 102082PanjimRSP 125676
AizwalRSP 160181GuwahatiRSP 159571PatnaRSP 166873
AmbalaRSP 102049HyderabadRSP 134483PondicherryRSP 135299
BangaloreRSP 118219ImphalRSP 159875Port BlairRSP 220191
BhopalRSP 169398ItanagarRSP 160647RaipurRSP 169751
BhubhaneswarRSP 124305JaipurRSP 123143RanchiRSP 166751
ChandigarhRSP 102790JammuRSP 108726ShillongRSP 159828
ChennaiRSP 133593JullunderRSP 108743ShimlaRSP 109295
DamanRSP 177747KohimaRSP 160154SilvasaRSP 112114
DehradunRSP 161143KolkataRSP 119941SrinagarRSP 109536
FaridabadRSP 102287LucknowRSP 155054TrivandrumRSP 124923
GandhinagarRSP 218671MumbaiRSP 108412VijayawadaRSP 127611
GangtokRSP 159289New DelhiRSP 102072VisakhapatnamRSP 127290
GhaziabadRSP 154410NoidaRSP 155444
(Source: iocl.com)

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வலைத்தளத்தின்படி, டீலர் குறியீடுகள் “ஒவ்வொரு பெட்ரோல் பம்பின் வளாகத்திலும் முக்கியமாகக் காட்டப்படுகின்றன”. "எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட விலை விவரங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே குறிக்கப்படுகின்றன. விலை நிலவரங்கள் ஒவ்வொரு நகரத்திற்கும், விற்பனை நிலையத்திற்கு மாறுபடும்" என்று இந்தியன் ஆயில் வலைத்தளம் தெரிவித்துள்ளது.