அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஈஸியா தெரிந்து கொள்ளலாம் எப்படி தெரியுமா?

உங்கள் மொபைலில் எந்த மாநிலத்தின் விலை தெரியவேண்டுமோ அதற்கான எண்களை அடித்தாலே அந்தந்த மாநில விலை நிலவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாகவே வந்து விடும்

அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஈஸியா தெரிந்து கொள்ளலாம் எப்படி தெரியுமா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரங்கள் அன்றாடம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளின் விலை மாற்றமும் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தியாவின் பெட் ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் உலகளாவில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை நிலவரம் மாநிலத்திற்கு மாநிலம், பெட் ரோல் நிலையத்திற்கு நிலையம் வேறுபடுகிறது. உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்த்திற்கான செலவீனத்தை கணக்கில் கொண்டு விலை நிர்ணயத்தில் வேறுபாடுகள் நிலவுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமனான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அன்றாடம் விலை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள குறுஞ்செய்தி முறையை நடப்பில் வைத்துள்ளது. உங்கள் மொபைலில் எந்த மாநிலத்தின் விலை தெரியவேண்டுமோ அதற்கான எண்களை அடித்தாலே அந்தந்த மாநில விலை நிலவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாகவே வந்து விடும். 

இந்தியன் ஆயில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை தெரிந்து கொள்வது எப்படி?  இந்தியன் ஆயிலுக்கு 9224992249 என்ற எண்ணிற்கு பின்வரும் விதத்தில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். 

Newsbeep

RSP<space>petrol pump dealer code

இந்தியன் ஆயில் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்ட மாநிலவாரியான பெட்ரோல் பம்ப் டீலர்களின் கோடுகள்

CitySMS textCitySMS text
New DelhiRSP 102072KolkataRSP 119941
MumbaiRSP 108412ChennaiRSP 133593
AgartalaRSP 159850AizwalRSP 160181
AmbalaRSP 102049BangaloreRSP 118219
GandhinagarRSP 218671GangtokRSP 159289
GuwahatiRSP 159571HyderabadRSP 134483
JullunderRSP 108743KohimaRSP 160154
LucknowRSP 155054PanjimRSP 125676
RanchiRSP 166751ShillongRSP 159828
ShimlaRSP 109295SrinagarRSP 109536
FaridabadRSP 102287GurgaonRSP 102082
NoidaRSP 155444GhaziabadRSP 154410
BhopalRSP 169398BhubhaneswarRSP 124305
ChandigarhRSP 102790DehradunRSP 161143
ImphalRSP 159875ItanagarRSP 160647
JaipurRSP 123143JammuRSP 108726
PatnaRSP 166873PondicherryRSP 135299
Port BlairRSP 220191RaipurRSP 169751
TrivandrumRSP 124923SilvasaRSP 112114
DamanRSP 177747VijayawadaRSP 127611
VisakhapatnamRSP 127290
(Source: iocl.com)