பட்ஜெட் எப்படி தயாரிக்கப்படுகிறது…? தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்

 நிதிஅமைச்சகம் மற்ற துறை அமைச்சர்களுடனான கலந்துறையாடலுக்குப் பின்னர் வரவு செலவு திட்டப் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
பட்ஜெட் எப்படி தயாரிக்கப்படுகிறது…? தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்

யூனியன் பட்ஜெட் அறிவிப்பிற்கான விழா ஒரு பாரம்பரிய ஹல்வா விழாவுடன் தொடங்குகிறது.


யூனியன் பட்ஜெட் என்பது இந்தியாவின்  ஆண்டுக்கான வருமானம் மற்றும் செலவீனம் குறித்த நிதிஅறிக்கை ஆகும். இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ஜூலை 5, 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றபின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாகும். இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் பியூஸ் கோயால் தாக்கல் செய்திருந்தார். நிதிஅமைச்சகம் மற்ற துறை அமைச்சர்களுடனான கலந்துறையாடலுக்குப் பின்னர் வரவு செலவு திட்டப் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பு பற்றி 5 விஷயங்கள் : 

1. நிதி அமைச்சகம் மற்றும் செலவு செய்யும் அமைச்சக அதிகாரிகளுக்கும் இடையே வரவு மற்றும் செலவு குறித்து திட்டமிட்டும் கணக்கிட்டும் பட்ஜெட்டினை உருவாக்குகிறது. பட்ஜெட்டில் தனியார் துறை, அரசு சாரா அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடி பட்ஜெட் உருவாக்கப்படுகிறது. திட்ட நிதிகளில் எவ்வளவு பணம் செலவழிக்கப்படும் என்பதை நிதி அமைச்சகமே மதிப்பீடு செய்கிறது. 

2. நிதியமைச்சகத்தின் பட்ஜெட் பிரிவு அனைத்து அரசாங்க அமைச்சகங்கள் அல்லது அனைத்திற்கும் விரிவான வழிமுறைகளை உள்ளடக்கிய வருடாந்திர பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யும். 

3. ஒவ்வொரு அமைச்சகமும் அடுத்த ஆண்டுக்குள் எவ்வளவு பணம்  தேவைப்படும் என்பதற்கான மதிப்பீடுகளை வழங்குவார்கள். 

4. யூனியன் பட்ஜெட் அறிவிப்பிற்கான விழா ஒரு பாரம்பரிய ஹல்வா விழாவுடன் தொடங்குகிறது. இது பட்ஜெட் அச்சிட செயல்பாட்டின் தொடக்கத்தை கூறுகிறது. நிதியமைச்சர் மற்றும் பிற அதிகாரிகள் இந்த ‘ஹல்வா விழாவில் பங்கேற்பார்கள். இந்த ஹல்வா பட்ஜெட் தயாரிப்பு பணியில்  நேரடியாகவும் மறைமுகமாகவும் பணிபுரிந்த அதிகாரிகள் அனைவருக்கும் பரிமாறப்படும். 

5. மக்களவையில் வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்தவும் பரிசீலிக்கவும் ஜனாதிபதி பரிந்துரை பெற வேண்டும். பரிந்துரைக்கு பின்பே வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும். 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top