Profit

வீட்டுக் கடனுக்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?

ஹெச்.டி.எஃப்.சி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 20 பேஸ் புள்ளிகள் அதிகரித்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
வீட்டுக் கடனுக்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?

ஹெச்.டி.எஃப்.சி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 20 பேஸ் புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது ஒரே ஆண்டில் மூன்றாவது உயர்வாகும். ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 25 புள்ளிகள் அதிகரித்ததாலேயே இப்போது இந்த வட்டி உயர்வு கொண்டு வரப்படுள்ளது. மறுபுறம் எஸ்.பி.ஐ 8.45% மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 8.55% வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகின்றன.

எஸ்.பி.ஐ வீட்டுக் கடன்:

வீட்டுக் கடன் வழங்குவதில் பல திட்டங்களை வைத்துள்ளது எஸ்.பி.ஐ. எஸ்.பி.ஐ வீட்டுக் கடன், எஸ்.பி.ஐ பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வீட்டுக் கடன், ஃபிளெக்ஸி பே வீட்டுக் கடன், பிரிவிலேஜ் ஹோம் வீட்டுக் கடன், ஷவுரியா வீட்டுக் கடன், ப்ரீ - அப்ரூவ்ட் வீட்டுக் கடன், ரியால்டி வீட்டுக் கடன், டாப் அப் வீட்டுக் கடன், பிரிட்ஜ் வீட்டுக் கடன், டிரைபல் பிளஸ், ஏர்னெஸ்ட் பண முதலீடு, ரிவர்ஸ் மார்டேஜ் கடன், வர்த்தக ரியல் எஸ்டேட் வீட்டுக் கடன், சொத்து மீதான கடன் ஆகியவற்றை வழங்குவதாக எஸ்.பி.ஐ இணையதளம் கூறுகிறது.

30 லட்சம் வரையிலான தொகைக்கு கடன் பெறும் பணி செய்யும் பெண்களுக்கு 8.45-8.55% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 8.55% வட்டி. பணி அல்லாது வியாபரம் செய்வோருக்கு 8.6% - 8.7% வரை வட்டி வசூலிக்கப்படும்.

CategoryHome Loan (Term Loan)
Up to Rs 30 lakhAbove Rs 30 lakh and up to Rs.75 lakhAbove Rs 75 lakh
Salaried
Women8.45-8.55% p.a8.60-8.70% p.a8.70-8.80% p.a
Others8.50-8.60% p.a8.65-8.75% p.a8.75-8.85% p.a
Non-Salaried
Women8.60-8.70% p.a8.75-8.85% p.a8.85-8.95% p.a
Others8.65-8.75% p.a8.80-8.90% p.a8.90-9.00% p.a

ஹெச்.டி.எஃப்.சி வீட்டுக் கடன்:

பணிபுரியும் பெண்களுக்கு 30 லட்சம் வரையிலான கடனுக்கு 8.7% முதல் 9.2% வரை வட்டி. 30 லட்சத்துக்கு மேல் 8.80% -9.30% வரை வட்டி. மற்றவர்களுக்கு 30 லட்சம் வரை 8.75% - 9.25% வரை வட்டியும், 30 லட்சத்துக்கு மேல் 8.85% - 9.35% வரையும் வட்டி வசூலிக்கப்படும்.

ஐ.சி.ஐ.சி.ஐ வீட்டுக் கடன்:

பணிபுரியும் பெண்களுக்கு 8.55% வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. மற்றவர்களுக்கு 8.6%. தொழில் செய்வோருக்கு 8.7% வட்டி. கடன் நடைமுறைகளுக்கு, கடன் தொகையில் 0.5% கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உடன் சேவை வரியும் உள்ளது.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top