நிதியமைச்சர் அறிவிப்பின் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்!

மத்திய நிதியமைச்சர் பகிர்ந்துள்ள நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள் அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதியமைச்சர் அறிவிப்பின் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்!

ஹைலைட்ஸ்

  • ரூ. 20 கோடி மதிப்பிலான சிறப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்
  • சிறப்பு திட்டத்தை நாள்தோறும் விளக்கி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா
  • வெளி மாநில தொழிலாளர் நலன் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும், ஊடரங்கு காலங்களில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பதற்கு 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்திருந்தார். இது குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விவரித்தார். 20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட அறிவிப்பினை இன்று நிதியமைச்சர் பகிர்ந்துக்கொண்டார். இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரமானது ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக மேற்கொள்ளப்பட்ட முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கை காரணமாக அனைத்து விதமான தொழில்களும் முற்றிலுமாக முடக்கின. இந்த நடவடிக்கை பொருளாதாரத்தினை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. வணிகர்கள் பெருமளவு பாதிப்பினை எதிர்கொண்டனர். வேலையிழப்பு அதிகரித்தது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பகிர்ந்துள்ள நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள் அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் ஆத்மா நிர்பர் பாரத் அபியான் தொகுப்பு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முக்கிய அறிவிப்புகளின் சிறப்பம்சங்கள் இங்கே:
  • அமைச்சர்கள், தொழில்துறையினர் மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பு குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டர்.

  • "ஆத்மா நிர்பர் பாரத் அபியான்" திட்டமானது, நாட்டின் வளர்ச்சியை தூண்டுவதற்கும், தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்கவும் உதவும்.

  • பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் அமைப்புகள், மக்கள் தொகை மற்றும் நுகர்வு ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த "ஆத்மா நிர்பர் பாரத் அபியான்" திட்டம்.
  • சமூகத்தின் பல பிரிவுகளுடன் பரந்த மற்றும் ஆழமான ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் ஒரு விரிவான பார்வையின் அடிப்படையில் இந்த திட்டத்தினை வகுத்துள்ளார்.
  • இந்த திட்டத்தின் அங்கங்களை முதல் கட்டமாக இன்று நான் அறிவிக்கின்றேன். பின்வரும் நாட்களில் இந்த அறிவிப்பு தொடரும்.
  • அரசு 15 அம்ச திட்டங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக
  • 6 அம்சங்கள் மைக்ரோ, சிறு மற்றும்  நடுத்தர நிறுவனங்களுக்கும்,
  • 2 அம்சங்கள் ஊழியர்களுக்கும்,
  • 2 அம்சங்கள் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.
  • நிலம், உழைப்பு, பணப்புழக்கம் மற்றும் சட்டம் - உற்பத்தியின் காரணிகளில் கவனம் செலுத்தப்படும்.
  • உள்ளூர் நிறுவனங்களின் பிராண்டுகள் சர்வதேச அளவில் வளர்வதற்கு திட்டமிடப்படும்.
  • இதன் தொடர்ச்சியாக உள்ளூர் நிறுவனங்களின் பிராண்டுகள் சர்வதேச அளவில் விரிவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • உலகளாவிய மதிப்பு சங்கிலி ஒருங்கிணைப்பின் பகுதியாக பிரதமரின் திட்டம் உள்ளது.
  • உலகளாவிய மதிப்பு சங்கிலியோடு இணைவதற்கான நிறுவனங்களை உருவாக்க நம்மிடம் திறன் உள்ளது.
  • ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தற்போது சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
  • நேரடி பணப்பரிமாற்றம் (DBT) திட்டமானது, சமானிய மக்களுக்கு ஜன் தன் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை பரிமாற்றம் செய்ய வழிவகுத்தது.
  • பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் 41 கோடி ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இதுவரை ரூ .52,606 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்க, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இந்தக் கடன்களின் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வணிகம் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை இந்தக் கடன் வழங்கப்படும்.
  • இந்த கடன் மூலமாக 45 லட்சம் நிறுவனங்கள் பயனடையும். இதனால், நிறுவனங்கள் மீண்டும் தங்கள் தொழில்களை தொடங்கலாம்.
  • கடன் வழங்குவதற்கு முன்னதாக சிறு, குறு மற்றும்  நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • ரூ .1 கோடி முதலீடு ரூ .5 கோடி விற்றுமுதல்(turnover) செய்யும் நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகவும்,
  • ரூ .10 கோடி ரூ .50 கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் குறு நிறுவனங்களாகவும்,
  • ரூ .20 கோடி முதலீடு ரூ .100 கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களா புதிய வரையறைகள் நிர்ணயித்துள்ளது.
  • மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்திருந்த உதவி தொகுப்பில், குறிப்பிட்ட வரையறைக்குள் வரும் சிறிய தொழில் நிறுவனங்களில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொழிலாளர் வைப்பு நிதிக்காக நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய தொகையை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2,500 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். இந்த சலுகைகள் மூலமாக 3,67,000 நிறுவனங்கள் பயனடையும்.
  • வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள், மற்றும் குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டம் ஒன்றை மத்திய அரசு தொடங்கவுள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படும் நோக்கில் 200 கோடி ரூபாய் வரையிலான மதிப்புள்ள டெண்டர்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்பது தடைசெய்யப்படும். அதற்கேற்ற வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்படும்.
  • மின்சார விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு வர வேண்டிய தொகைகளின் பெயரில் அந்த நிறுவனங்களுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும். இந்திய மின் விநியோக நிறுவனங்கள் தற்போது தங்களின் சேவை வழங்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்க வேண்டிய தொகையாக 94 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது.
  • இந்திய ரயில்வே, இந்திய நெடுஞ்சாலை துறை, மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றின் ஒப்பந்ததாரர்கள் தங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பணிகளை முடிப்பதற்கு மேலும் ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்படும்.
  • 2019- 2020ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதி 31 ஜூலை மற்றும் 31 அக்டோபர் 2020 எனும் தேதியிலிருந்து 30 நவம்பர் 2020 வரை நீட்டிக்கப்படுகிறது. வரி தணிக்கை தேதி செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.