கேரளாவுக்கு செல்லும் நிவாரண பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அறிவிப்பு

நிவாரணமாக அனுப்பப்படும் பொருட்களுக்கு சுங்க வரி மற்றும் ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

கேரளாவுக்கு செல்லும் நிவாரண பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரணமாக இறக்குமதி செய்யப்படும் அல்லது நிவாரணமாக அனுப்பப்படும் பொருட்களுக்கு சுங்க வரி மற்றும் ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும், ஐ.ஜி.எஸ்.டி விலக்கும் அளிப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு குறித்த ஆவணங்கள் அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

 

இந்த வரி விலக்கு டிசம்பர் 31,2018 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயன், சுங்க வரி மற்றும் ஐ.ஜி.எஸ்.டியில் இருந்து நிவாரண பொருட்களுக்கு விலக்கு அளிக்குமாறு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
 

v5bnrveg

 மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்தியாவசிய சேவைகளை தொடங்க முழு முயற்சிகள் நடந்து வருகிறது. இன்னும் செங்கனூர் பகுதியில் 5 கிராமங்களில் மக்கள் சிக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. தொலை தொடர்பு சேவைகள் 90% செயல்பாட்டுக்கு வந்தன. எர்பொருளும் போதிய அளவு இருக்கிறது என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.