This Article is From Aug 06, 2018

டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தினால் 20% ஜி.எஸ்.டி தொகை கேஷ்பேக்

ஆர்வும் உள்ள மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றார் பியூஷ் கோயல்.

டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தினால் 20% ஜி.எஸ்.டி தொகை கேஷ்பேக்

டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளுக்கு கேஷ்பேக் வழங்கும் திட்டத்தை ஜி.எஸ்.டியின் கீழ் சோதனை முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்த இருப்பதாக நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சிறு குறு தொழில்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் குறித்து, குழு அமைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. 

 

 

இந்த டிஜிட்டல் கேஷ்பேக் பொறுத்தவரையில், ரூபே கார்ட், பிம் பேமென்ட் செயலி மற்றும் யூ.பி.ஐ செயலி மூலம் பணம் செலுத்தினால், அந்த கட்டணத்தில் இருக்கும் ஜி.எஸ்.டி தொகையில் 20%, வாடிக்கையாளர்ன் வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்தப்படும் என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த திட்டம் லாபம் தருமா அல்லது நஷ்டம் ஏற்படுமா போன்றவற்றை தெரிந்து கொள்ளவும் முதலில் சோதனை முயற்சியாக, ஆர்வும் உள்ள மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றார் பியூஷ் கோயல்.

.