Profit

ஜி.எஸ்.டி. வரி : மே மாதத்தில் மட்டும் ரூ. 1,00,289 கோடி வருமானம்!

கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜி.எஸ்.டி. வரி 6.67 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜி.எஸ்.டி. வரி : மே மாதத்தில் மட்டும் ரூ. 1,00,289 கோடி வருமானம்!

ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த வருமானம் குறைவாகவே உள்ளது.


New Delhi: 

மே மாதத்தில் மட்டும் ரூ. 1,00,289 கோடி அளவுக்கு ஜி.எஸ்.டி. வரி மூலம் வருவாய் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 6.67 சதவீதம் அதிகம் ஆகும். 

நாடு முழுவதும் பல்வேறு வரிகளை ஒருங்கிணைத்து ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை என்கிற ஒரே வரியாக மத்திய மாநில அரசுகள் வசூலித்து வருகின்றன. இந்த வரி விதிப்பு முறை விதிக்கப்பட்ட சமயத்தில் பல சர்ச்சைகளை கிளப்பினாலும், தற்போது பல்வேறு தரப்பினர் அதனை முறையாக பின்பற்றத் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. 

ஜி.எஸ்.டி. மூலம் பெறப்படும் வருவாய் மாதம்தோறும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 1,13,865 கோடி வருமானம் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. மே மாதத்தில் இந்த வருவாய் ரூ. 1,00,289 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.67 சதவீதம் அதிகம் ஆகும். 

மே மாதம் மொத்தம் 72.45 ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த வருவாய் பெறப்பட்டுள்ளது. மே மாதம் பெறப்பட்டுள்ள ரூ. 1,00,289 கோடி என்பது சராசரியை விட 2.21 சதவீதம் அதிகம் ஆகும். 
 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top