This Article is From Jan 19, 2019

“நிதிப் பற்றாக்குறையா, வளர்ச்சியா..?”- பட்ஜெட்டில் எதற்கு முக்கியத்துவம்

லோக்சபா தேர்தல் வர இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தனது கடைசி பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளது.

“நிதிப் பற்றாக்குறையா, வளர்ச்சியா..?”- பட்ஜெட்டில் எதற்கு முக்கியத்துவம்

நிதிப் பற்றாக்குறை ஏற்றம் கண்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • பாஜக அரசின் கடைசி பட்ஜெட் இது
  • நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்
  • வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்

லோக்சபா தேர்தல் வர இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தனது கடைசி பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதைக் காட்டிலும், வளர்ச்சியை மேம்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சிஎன்பிசி டிவி-18 தொலைக்காட்சிக்கு பட்ஜெட் குறித்து அளித்தப் பேட்டியில், “மத்திய பட்ஜெட்டில் எப்படிப்பட்ட அறிவிப்பு இருக்கும் என்பது சூழ்நிலையைப் பொறுத்து முடிவாகும். எனவே, அது குறித்து தற்சமயம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. சில விஷயங்களுக்குக் கவனம் கொடுத்தேயாக வேண்டிய கட்டாயம் இருக்கும். அதற்கு நிச்சயமாக உடனடி கவனம் கொடுக்கப்படும்.

பொருளாதாரம் என்ன கேட்கிறதோ, அதற்கு ஏற்றாற் போலத்தான் அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட முடியும்” என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்.

தேர்தல் வர உள்ளதால் மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதைக் காட்டிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப்படும் எனப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளை மகிழ்விக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளிவரலாம்.

i31k171g

அதே நேரத்தில் நாட்டின் நிதிப் பாற்றாக்குறை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டுக்கு மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறை 3.3 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

“கிராமப்புற வாக்காளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளை மகிழ்விப்பதற்காக மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிடுமேயானால், நிதிப் பற்றாக்குறை கண்டிப்பாக அதிகரிக்கும். அதே நேரத்தில் நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைவதற்கு மத்திய அரசு ஏதாவது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று ஹாங்-காஙை மையமாக வைத்துச் செயல்படும் நிதித் துறை வல்லுநர் ரூக்மேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி-யில் பல்வேறு பொருட்களுக்கு சமீபத்தில்தான் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. தேர்தல் வர உள்ளதால், பட்ஜெட் தாக்கல் அன்று பல அதிரடி அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

.