கொரோனாவை எதிர்கொள்ள ரூ. 1.50 லட்சம் கோடி வரை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யலாம் என தகவல்!!

நேற்று தொழில்துறைக்குச் சலுகைகளை அறிவித்த நிதியமைச்சகம் ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூன் 30-ம்தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இதற்கிடையே நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை சரி செய்வது குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.

கொரோனாவை எதிர்கொள்ள ரூ. 1.50 லட்சம் கோடி வரை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யலாம் என தகவல்!!

ரூ. 2.30 லட்சம் கோடி வரை ஒதுக்கப்படலாம் என்று இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

ஹைலைட்ஸ்

  • கொரோனாவால் இந்திய தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
  • நிதியமைச்சர் தலைமையிலான குழு பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறது
  • இந்த வாரத்திற்குள் கொரோனா பாதிப்பு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகலாம்
NEW DELHI:

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காகவும், அதனால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறையைச் சரி செய்யும் நோக்கிலும், மத்திய அரசு ரூ. 1.50 லட்சம் கோடி வரையில் ஒதுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதனால் நாட்டில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக தொழில்துறையை நம்பியிருக்கும் தொழிலாளர்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் போன்றவர்களின் நிலைமை கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு நேரடி நிதியுதவி போன்ற அறிவிப்புகள் ஏதும் வெளிவரவில்லை. 

நேற்று தொழில்துறைக்குச் சலுகைகளை அறிவித்த நிதியமைச்சகம் ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூன் 30-ம்தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இதற்கிடையே நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை சரி செய்வது குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். 

இந்த நிலையில், கொரோனா பாதிப்பை சரி செய்வதற்காக ரூ. 1.50 லட்சம் வரையில் நிதி ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ. 2.30 லட்சம் கோடி வரை ஒதுக்கப்படலாம் என்று இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. எப்படியும் இந்த வாரத்திற்குள் கொரோனா பாதிப்பு நிதி குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.