
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த 60 நாட்களுக்கும் மேலாக முழு முடக்க நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்தியிருந்ததது. இதன் காரணமாக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் நாட்டில் மின்னணு உற்பத்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் செவ்வாய்க்கிழமை ரூ .50,000 கோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சர்வதேச அளவில் மிகப்பெரிய 5 செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த சலுகைகள் பலனளிக்கும்.
ஐந்தாண்டுகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கூடுதல் விற்பனையில் 4 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையிலான பணத்தை உள்ளடக்கிய உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையை (பி.எல்.ஐ) அரசாங்கம் வழங்கி வருகிறது என மத்திய அமைச்சர் ரவி பிரசாத் தெரிவித்திருந்தார்.
இந்த நிதியை பெறும் நிறுவனங்களின் பெயர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். பி.எல்.ஐ திட்டத்திற்கு ஐந்து இந்திய நிறுவனங்களும் தேர்வு செய்யப்படும், மேலும் இது தொடர்பான இரண்டு முன்முயற்சிகளுடன், 2025 க்குள் இந்தியா ரூ .10 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் பாகங்களை உற்பத்தி செய்ய உதவும் என்று திரு பிரசாத் கூறினார்.
இவ்வகையிலான ஸ்மார்ட் போன் உற்பத்தியானது பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. மத்திய அரசு தற்போது ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் சாம்சங் மற்றும் தைவானிய நிறுவனங்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் போன்ற ஏற்கெனவே உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்களை 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஈர்த்துள்ளது.
உற்பத்தியின் முக்கிய தேவையாக, முன்பே கட்டமைக்கப்பட்ட தொழிற்சாலைகளும், ஏற்றுமதியை மேற்கொள்ள போதுமான சாலை உள்ளிட்ட வசதிகளை நிறுவனங்கள் விரும்புகின்றன. "மணமகன் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதனுடன் முழு திருமண ஊர்வலத்தையும் நாங்கள் விரும்புகிறோம்.“
தொற்று காரணமாக பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் உற்பத்தி தளங்களை தேடுகின்றது. இந்நிலையில், இந்தியா அதற்கு தயாராகி வருகின்றது. இந்தியாவில் மலிவான உழைப்பு சக்தி இருப்பதால் பல நிறுவனங்கள் இந்தியாவை நாடுகின்றன. நாடு முழுவதும் 100 கோடி தொலைப்பேசி இணைப்புகளை கொண்டிருந்தாலும், மொபைல் பயன்பாட்டு இதில் சரி பாதியாகத்தான் உள்ளது.