ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு!

ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் பெரும்பான்மை பங்குகளை விற்க மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, அடுத்த எந்த முயற்சியும் எடுக்க முடியாமல் இருந்தது.

ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு!

ஏர் இந்தியாவின் தனது அனைத்து பங்குகளையும் தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு இன்று காலை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனமானது சுமார் ரூ.58,000 கோடி கடனில் சிக்கி தவித்து வருகிறது.

இது தவிர அந்நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் மேல் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது, இந்திய அரசு, அந்த விமான நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும், அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவைகளை தன்வசம் வைத்துள்ளது. 

இது தொடர்பாக ஏர் இந்தியா தனது பங்கு விற்பனை ஏல அறிவிப்பில், உள்நாட்டு மற்றும் சர்வதேச வழிதடங்களில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தனது 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 

பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார் நிறுவனங்களுக்கு வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதியை கெடுவாக அறிவித்துள்ளது. 

எந்தவொரு ஏலதாரரும் ஆவணத்தின் படி, சுமார் 3.26 பில்லியன் டாலர் கடனை மற்ற கடன்களுடன் ஏற்றுக்கொள்ள ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏர் இந்தியா பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு தன் வசம் உள்ள ஏர் இந்தியாவின் பங்குகளில் 76 சதவிகிதத்தை தனியாருக்கு விற்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் அதற்கு யாரும் ஆர்வம் காட்டாததை தொடர்ந்து 100 சதவிகித பங்குகளையும் விற்று விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், ஏர் இந்தியாவின் இழப்பு சுமார் 69,575.64 கோடி ரூபாயாக இருந்தது என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
 

Listen to the latest songs, only on JioSaavn.com